ப.சிதம்பரம் பா.ஜ.க. விற்கு வந்தால் வரவேற்போம்: இல.கணேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவுடன், தமாகா கூட்டணி வைத்துள்ளதை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்துள்ளமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாரதீய ஜனதாக் கட்சியில் சேர முன்வந்தால்வரவேற்போம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன்கூறியுள்ளார்.

அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதற்குஅக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமானப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதை பாரதீய ஜனதாக் கட்சி வரவேற்றுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில்ஒருவரான இல. கணேசன் இதுகுறித்து திங்கள்கிழமை கூறுகையில், ப.சிதம்பரம்ஆரம்பத்திலிருந்தே, அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். இப்போது பகிரங்கமாககருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் பாரதீய ஜனதாக் கட்சியில் சேர முன்வந்தால் நாங்கள் வரவேற்போம். அதேசமயம், அப்படிச் சேராமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கும் அவர்உழைக்க முடியும் என்றார் கணேசன்.

சத்தியமூர்த்தி பவனில் கொந்தளிப்பு:

இந்த நிலையில், ப.சிதம்பரத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைமையகமானசத்திமூர்த்தி பவனில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவரது படம் அடங்கியசுவெராட்டிகள் தீவைக்கப்பட்டன.

திங்கள்கிழமை காலை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் சிலர் ஒன்று கூடிசிதம்பரத்திற்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், அவர்களில் சிலர் சிதம்பரம் படம்ஒட்டிய சுவரொட்டிகளை தீவைத்து எரித்தனர். செருப்பாலும் அவரது படத்தைஅடித்தனர்.

மேலும், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ஆருண் மற்றும்புரசைவாக்கம் த.மா.கா. எம்.எல்.ஏ ரங்கநாதனுக்கு எதிராகவும் தொண்டர்கள்கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+