காதல் தோல்வி: இளம் ஜோடி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு:

காதல் தோல்வியால், காதலியும் காதலனும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்செங்கோடு சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு என்ற பொன்னையா (25). இவர் இங்குள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இதேபட்டறையில், கவிதா (17) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனை அறிந்த கவிதாவின் தாயார் பூங்கொடி மகளைக் கண்டித்து வந்தார். கதலர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்திருமணத்திற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த சனிக்கிழமை இரவு கவிதாவின் தாயார், பிரபு, கவிதா, ஆகியோர் விசைத்தறிப் பட்டறையில் வேலைபார்த்து வந்தனர்.

நள்ளிரவில் வெளியே சென்ற பிரபு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ பற்றி எரியும்போது கவிதாவையும் கட்டிப் பிடித்துக்கொண்டார். இதில் இருவரும் பலத்த தீக் காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் உடல் கருகி அதே இடத்தில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+