விமானப்படையின் கிரிக்கெட் போட்டி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளிடையே நட்புறவை வளர்க்க மூன்று நாடுகளின் விமானப்படை வீரர்கள் கலந்து கொள்ளும் கிரிக்கெட்போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
இப்போட்டியை நடத்தும் இந்திய விமானப்படையின் செய்தி தொடர்பாளர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில்,
இந்திய விமானப்படை தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ், சமீபத்தில் இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். அந்நாடுகளுடனானநட்புறவை பலப்படுத்துவதற்காக இத்தகைய போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது
இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளோடு இரு முறை மோதும். அதிக புள்ளிகளை பெறும் இரு அணிகள் மார்ச் 20ம் தேதி நடைபெறும்இறுதி போட்டியில் விளையாடும் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications