கூட்டணியை எதிர்த்து எஸ்.ஆர்.பி கொடும்பாவி எரிப்பு
கோவை:
கோவை தமிழ் மாநில காங்கிரசில், அ.தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு எதிர்ப்பு வலுக்கிறது. காரமடை அருகே எஸ்.ஆர் பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன் ஆகியோர் கொடும்பாவியை அக்கட்சியினர் எரித்தனர். இதனால் காரமடையில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணி இறுதியானது. தொகுதி பங்கீடும் முடிந்த நிலையில் மறு பரிசீலனைசெய்ய வேண்டும் என ப.சிதம்பரம் விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரசில் புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிதம்பரத்தின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்துள்ளது. சிதம்பரத்தின் கருத்தை எதிர்த்து த.மா.கா தொண்டர்கள்அவருடைய கொடும்பாவியை திங்கள்கிழமையன்று சென்னையில் எரித்தனர்.
அதேசமயம், கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்,ஜெயந்தி நடராஜன் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர்.
காரமடை அருகே உள்ள பொல்லாதி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரசின் தொண்டர்கள் தலைமையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயலலிதாவின் கைக் கூலி எஸ்.ஆர்.பி எனக் கோஷமிட்டனர். அவரது கொடும்பாவியை செருப்பால் அடித்து தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு ஓய்ந்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications