நகர்ப்புற வாழ்க்கையால் பாதிக்கப்படும் குழந்தைகள்
கோவை:
நகர்ப்புற வாழ்க்கையில் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச் சத்துகிடைப்பதில்லை, "" நம் எல்லோருக்கும் தேவை பண்ணைக் கலாச்சாரமே ஒழிய, பார்மசி(மருந்து) கலாச்சாரம் அல்ல என இந்திய சத்துணவுநிறுவனச் செயலர் கோபாலன் தெரிவித்தார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் நடந்த வேந்தர் ராஜம்மாள் தேவதாசின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட இந்திய சத்துணவுநிறுவனத் தலைவர் சி. கோபாலன் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்தபோது நகர்ப்புறத்தில் 15 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். கிராமப்புறங்களில் 85 சதவீதம் பேர் வசித்து வந்தனர். ஆனால்இப்போது நகர்ப்புறங்களில் 85 சதவீதம் பேர் உள்ளனர்.
நகர்புறங்களில் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. இது கட்டாயமாகக் கூட உள்ளது.இந்த நிலையில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்குப் போதுமான சத்துணவு கிடைப்பதில்லை.
பன்னாட்டு நிறுவனங்கள் அளிக்கும் உணவு விளம்பரங்களால் பொதுமக்கள் பெரிதும் குழம்பிப் போய் உள்ளனர். முன்பிருந்த காலத்தில் எவ்விதஊட்டச்சத்துக்களும் டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படவில்லை.
இயற்கையில் விளைந்த பொருட்களில் போதுமான ஊட்டச் சத்துக்கள் இருந்தன. இத்தகைய தானிய வகையான சோளம், கம்பு போன்றவை கூடஇப்போது உற்பத்தி குறைந்து விட்டது.
பிறந்த குழந்தைக்கு வைட்டமின் ஏ சத்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இது தேவையற்றது. இதனால் குழந்தைகளுக்கு மரணம் கூடநேரும் அபாயம் ஏற்படும். நம் அனைவருக்கும் தேவையானது ""பண்ணை கலாச்சாரமே ஒழிய ""பார்மசி கலாச்சாரம் அல்ல.
கூட்டுக் குடும்பமாக இருந்த காலத்தில், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்கவும், பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும் பெரியவர்கள் இருந்தனர்.
அவர்கள் தேவையான ஊட்டச் சத்துக்களை கர்ப்பிணிப் பெண்களுக்கு அளித்து வந்தனர். ஆனால் இப்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்களைத் தாங்களேபாதுகாத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிறக்கும் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் 45 சதவீதம் எடை குறைவாகப் பிறக்கிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications