கருணாநிதிக்கு கண்ணப்பன் ஆதரவு
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கண்ணப்பன், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை திங்கள்கிழமைசந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
சமீபத்தில் கட்சி துவக்கியவர் கண்ணப்பன். மக்கள் தமிழ் தேசம் என்ற இவரது கட்சி ஆரம்பம் முதலே 3-வது அணி குறித்துப் பேசி வந்தது. இன்னொருஜாதிக் கட்சியான ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சியுடன் இணைந்து தமிழக ஜனநாயகக் கூட்டணி என்ற கூட்டணியையும் இவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், மூப்பனார், அதிமுக பக்கம் போய் விட்டார். பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக பக்கம் போய் விட்டதால், ஜாதிக் கட்சிகளுக்குத்திடீர் டிமான்ட் ஏற்பட்டது. இவர்களை சேர்ப்பதில் பல்வேறு கட்சிகளும் ஆர்வம் காட்டின. குறிப்பாக திமுக கூட்டணியில் இவர்களைச் சேர்க்க பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன.
முதல்வர் கருணாநிதியும், இருகட்சிகளையும் திமுக கூட்டணியில் சேர்க்க சில நல்ல உள்ளங்கள் முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது முதல் கட்டமாககண்ணப்பன் திமுக கூடாரத்திற்கு வந்துள்ளார்.
திங்கள்கிழமை அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும் 13-ம் தேதி அவர் மீண்டும் கருணாநிதியைச்சந்திக்கிறார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
கண்ணப்பன் கருணாநிதியைச் சந்தித்தபோது, அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications