குற்றச்சாட்டை எதிர்கொள்ள பாஜக தயார்: அத்வானி
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்ள பாஜகதயாராக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி புதன்கிழமை கூறினார்.
இந்திய ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவது தொடர்பாக ஆயுத நிறுவன ஏஜன்ட்டுகளிடம் லஞ்சம் வாங்கினார்பங்காரு லட்சுமண் என்பதே முக்கியக் குற்றச்சாட்டு.
அதாவது,இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த 2 நிருபர்கள் வெஸ்ட் என்ட் என்ற வெளிநாட்டு ராணுவ தளவாடநிறுவனத்தைச் சேர்ந்த ஏஜன்டுகள் போல் நடித்து அரசியல்வாதிகளையும், பல ராணுவத் தலைவர்களையும் நேரில்சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது பணம் கைமாறிய காட்சியை மறைத்து வைத்திருந்த வீடியோ காமிராவில் படம் பிடித்தனர். அதைஅடிப்படையாக வைத்து ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,ஆயுதப் பேர ஊழல் குறித்தான எந்த விதமானபிரச்சனையையும் எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது.
மேலும் பாஜக வோ அல்லது பாஜக வைச் சேர்ந்த அமைச்சர்களோ ஆயுதப் பேர ஊழல் வழக்கில் சம்பந்தப்படசாத்தியமில்லை. இதுகுறித்து எந்த விசாரணையையும் எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சித் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications