ஒரே நாளில் 24 விழாக்கள்: அமைச்சர் சாதனை
கோவை:
ஒரே நாளில் 24 இடங்களில் கலந்து கொண்டு விழாக்களை முடித்துள்ளார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.
தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்குள் விழாக்களை முடிக்க வேண்டும் என்ற நிலையில், தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஒரே நாளில் 24விழாக்களில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் காலை 10 மணிக்குத் துவங்கிய விழா இரவு வரை நீடித்தது. இதில் மாவட்ட கலெக்டர் கலந்துகொள்ள இயலாததால் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,அனைத்து விழாக்களுக்கும் தலைமை ஏற்று நடத்தினார்.
காரமடை, சிறுமுகை நகராட்சிப் பகுதிகளில் 24 நலத்தி ட்டங்கள், பல்வேறு இடங்களில் அடிக்கல் நாட்டு விழாக்கள், என கோவை மாவட்டமேசெவ்வாய்க்கிழமையன்று அமர்க்களப்பட்டது.
மேடூர், கண்டியூர், சீனியூர், பள்ளேபாளையம், ஆகிய இடங்களில் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா, நீண்ட நாள் கோரிக்கையில் இருந்த நெல்லித்துறையில் பவானிஆற்றின் மீதான பாலம் திறப்பு விழா உள்பட பல நிகழ்ச்சிகளில் அமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டார்.
மேலும், சிறுமுகை இரண்டாவது குடிநீர் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இந்த விழாக்கள் அனைத்தையும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே நடத்திவிட வேண்டும் என்ற வேகம் தான் அமைச்சரின் சாதனைக்கு காரணமாகும்.
மேலும், தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறவும் இந்த விழாக்கள் சந்தர்ப்பமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications