இது எப்படி இருக்கு?
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் ஆரம்பமே களை கட்டியுள்ளது.
கூட்டணி தொடர்பாக நடந்த விவாதங்கள், ஆலோசனைகள், கூட்டங்கள், பேட்டிகள், தாவல்கள், மோதல்கள் எனவிறுவிறுப்பான தேர்தல் களத்தைக் கண்டு களித்துக் கொண்டுள்ளது தமிழகம்.
தி-முக அணி பெ-ரிதா, அதி-முக அணி பெ-ரிதா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், வித்தியாசமான ஒரு புள்ளிவிவரம் நமக்குக் கிடைக்கிறது.
அதி-முக அணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கடந்த சட்டசபைத் தேர்தலில் தி-முக அணியில் இருந்தவை.அமோக வெற்றியை சுவைத்தவை.
தமிழ் மா-நில காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலின் போதுதான் பிறந்தது. -திமுக அணியில் சேர்ந்து 40 இடங்களில்போட்டியிட்டது. அதில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது அதி-முக அணிக்கு வந்து விட்டது. இந்த -முறைஅந்தக் கட்சிக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள இடங்கள் 47தான். அதில் காங்கிரஸ் கட்சிக்கு 15, தனது கூட்டணிக்கட்சிகளுக்கு 2 இடங்கள் போக மீத-முள்ள 30 இடங்களில் மட்டுமே தமிழ் மா-நில காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த -முறை தி-முக அணியில் இணைந்து 11 இடங்களில் -நின்றது. இதில் 8இடங்களைப் பிடித்தது. இப்போது அதற்குக் கிடைத்துள்ளதோ வெறும் 8 இடங்கள் மட்டுமே.
மார்க்சிஸ்ட் கட்சியின் -நிலை கொஞ்சம் பரவாயில்லை. கடந்த தேர்தலில் மதி-முகவுடன் இணைந்து 40 இடங்களில்போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் மட்டுமே தேறியது. இப்போது 8 இடங்கள் அதற்குக் கிடைத்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த -முறை மதி-முகவுடன் கூட்டணி சேர்ந்து 116 இடங்களில் போட்டியிட்டது. இதில்,4-ல் வெற்றி பெற்றது. இப்போது 27 இடங்களில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எத்தனை இடங்களில் போட்டியிட்டாலும் அது ஜெயிப்பதென்னவோரொம்பக் கஷ்டம்தான். எனவே கிடைக்கும் இடங்களெல்லாம் அதற்குப் போனஸ் போலத்தான். கடந்த தேர்தலில்65 இடங்களில் போட்டியிட்டது. எல்லாவற்றையும் இழந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இப்போது 15இடங்கள் கிடைத்துள்ளது. என்ன செய்யப் போகிறதோ?
பார்வர்ட் பிளாக் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சிகளின் -நிலைதான் ப-ரிதாபம். தேசிய லீக் கடந்த தேர்தலில் தி-முகஅணியில் இருந்தது. 5 இடங்களில் போட்டியிட்டு அத்தனையிலும் வெற்றி பெற்றது. இப்போது சிங்கிள் சீட்தான்கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் போட்டியிடலாம்.
பார்வர்ட் பிளாக் கட்சி கடந்த தேர்தலில் 2-ல் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. இப்போது 1 சீட்கொடுத்திருக்கிறார்கள்.
-முதலித் தலைவர் ஜான் பாண்டியனின் தமிழக-முன்னேற்றக் கழகத்திற்கு இது -முதல் தேர்தல். எனவே ஒரு சீட்கிடைத்திருப்பது அதற்கு போனஸ் மாதி-ரிதான்.
இந்த முறை நிடக்கவுள்ள தேர்தலில் அதி-முக அணியும் கூட குறைவான தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது.கடந்த தேர்தலின்போது அது 168 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. இப்போது 141 தொகுதகளில்மட்டுமே அது போட்டியிடுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications