ஜனநாயகத்துக்குப் பேராபத்து: சங்மா
கவுஹாத்தி:
பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமண் மேல் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு நாட்டின் ஜனநாயகத்தையேசீர்குலைத்து விடும் என்று நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பங்காரு லட்சுமண் லஞ்சம் வாங்கியது தொடர்பாக தெகல்காடாட் காம் வெளிக் கொண்டு வந்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டு நாட்டின் எதிர்காலத்திற்கு பங்கம்விளைவிப்பதாகும்.
இந்திய அரசியலையே கூறு போடும் விவகாரமாகும். மக்கள் இனிமேல் அரசியல் கட்சிகளையே நம்பாத நிலைஏற்படும். ஜனநாயகத்துக்குப் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்து விளைவித்து விட்டார்கள் பாரதிய ஜனதா கட்சியினர்.
நாட்டிற்கு ஆயுதம் வாங்குவதிலேயே ஊழல் புரியத் தொடங்கி விட்ட ஒரு கட்சி வேறு எல்லாத் துறையிலும்ஊழலில் ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு சங்கமா கூறினார்.
சங்மா முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கரஸ்கட்சியின் பொதுச் செயலாளர்.
முன்னதாக, இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக பங்காரு லட்சுமண் மேல்குற்றம் சுமத்தியது தெகல்கா நிறுவனம்.
இந்த விஷயத்தை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அம்பலமாக்கி, வாஜ்பாய்உடனடியாக அறிக்கை தாக்குதல் செய்ய செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் ராஜினாமா செய்தார்என்பது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications