வாஜ்பாய்க்கு திரிணாமுல் ஆதரவு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய்க்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் இந்திய தேசியலோக் தள் கட்சிகள் உ றுதி அளித்துள்ளன.
தெகல்கா டாட் காம் பா.ஜ.க. தலைவர், சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் மீது ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.
இதையடுத்து பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமண் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தான் கட்சிநிதிக்காகத்தான் பணம் பெற்ற்தாகவும், எந்த விதமான ஆயுத பேர ஊழலில் ஈடுபடவில்லை என கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ஏரன்நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிதிஷ்சென் குப்தா மற்றும்ஹரியானா முதல்வரின் மகன் அஜய் சவுதலா ஆகியோர் பிரதமருக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர்.ஆனால் குற்றம் செய்ததாக கூறப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர்.
பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு கூட்டியது. இந்த கூட்டத்தில் பங்காருலட்சுமணனின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு ஜனாகிருஷ்ணமூர்த்தியை தற்காலிக தலைவராக நியமிப்பதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் ராமச்சந்திரன் கூறுகையில், எங்கள் கட்சி ஆயுதபேர ஊழல் குறித்து விசாரணையும், விவாதமும் கோரும் என்றார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அத்வானி இந்த விஷயத்தை கவனமாக அணுகுமாறு பா.ஜ.க. தொண்டர்களைகேட்டுக் கொண்டார்.
பா.ஜ.க.வின் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் விஜய் குமார் மல்கோத்ரா கூறுகையில், ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டதாக எந்த அமைச்சர் மீதும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. கட்சியின் மீதான சந்தேகத்தைநீக்குவதற்கு எந்த விதமான சவாலையும் எதிர் கொள்ள கட்சி தயாராக உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications