பொறுத்திருந்து பாருங்கள் .. ப.சிதம்பரம்
சென்னை:
அதிமுக கூட்டணியை பரிசீலிக்க வேண்டும் என்று மூப்பனாரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். அவர் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து எனது அடுத்த கட்டநடவடிக்கை இருக்கும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததைக் கண்டித்துப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை விடுத்தார். அதில் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி யிருந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒருஅறிக்கையை வெளியிட்ட அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில்,பெங்களூரில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை மாலைப.சிதம்பரம் திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். வரவேற்புக்குப் பின்நுங்கம்பாக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு சிதம்பரம் சென்றார்.
அங்கு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களான புரசை ரங்கநாதன், சின்னய்யா, சுந்தரம்,ராமசாமி, முன்னாள் சிவகாசி எம்.எல்.ஏ. சொக்கர், முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் ஆகியோருடன் சிதம்பரம் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது,அதிமுகவுடனான கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைவர்மூப்பனாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதுகுறித்து எனது இரண்டு அறிக்கைகளிலும் தெரியப்படுத்தியுள்ளேன். தலைவர்மூப்பனார் இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.
என்னுடைய வேண்டுகோளை தலைவர் முன்பு வைத்திருக்கிறேன். அவர் மு டிவுஎடுக்கட்டும். இதைத் தவிர இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை. மூப்பனாரின்பதிலைப் பொறுத்து எனது முடிவை அறிவிப்பேன். அதுவரை காத்திருங்கள் என்றார்.
சிதம்பரத்தின் வீட்டில் ஏராளமான தொண்டர்களும், தமாகா பிரமுகர்களும்குழுமியிருந்தனர். அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications