For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் மீது வழக்கு: மீண்டும் விசாரிக்க கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மீதான சொத்துகுவிப்பு வழக்கை பாரபட்சமின்றி மீண்டும் விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் சொத்துகுவிப்பு வழக்கு குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னைமுதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னையை சேர்ந்த சமூக சேவகர் செண்பகமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விசாரணை அறிக்கையை மார்ச் 8ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார் நீதிபதி.அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையை மார்ச் 8ம் தேதி தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் செண்பகமூர்த்தி. அந்த மனுவில்அவர் கூறியுள்ளதாவது:

சென்னை மேயர் ஸ்டாலின் மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து விசாரித்த மாநில லஞ்ச ஒழிப்புத்துறைநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை ஆதாரமற்றது.

மேயரின் தந்தை முதல்வராக இருப்பதால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் ஸ்டாலின் குற்றமற்றவர் போல்வழக்கை முடித்துள்ளனர்.

1996 முதல் ஜனவரி 2001 வரை ஸ்டாலினின் குடும்ப வருமானம் மற்றும் சொத்துகள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைவிசாரித்துள்ளது. ஸ்டாலின் முதன்முதலில் எம்.எல்.ஏ.வான 1989ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு விசாரிக்கப்படவேண்டும்.

சொத்துகள் வாங்க ஸ்டாலினின் குடும்பத்தினர் பல்வேறு வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் வாங்கியுள்ளதாகலஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணை அறிக்கையில் கூறியுள்ளது.

1996ம் ஆண்டு மேயரான போதே ஸ்டாலின் தனது வேளச்சேரி வீட்டில் குடியேறிவிட்டார். அவருடைய மகன்1998ம் ஆண்டு தான் ஸ்நோ பவுலிங் நிறுவனத்தில் இயக்குநரானார்.

இதன்மூலம் ஆதாரமற்ற வகையில் ஸ்டாலினை காப்பாற்றும் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல்செய்துள்ளது. எனவே, இந்த வழக்கை பாரபட்சமற்ற வகையில் மீண்டும் விசாரிக்க வேறொரு அதிகாரியிடம்ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை காலஅவகாசம் கேட்டதால், நீதிபதி அசோக் குமார், விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X