வாஜ்பாயை பதவி விலகச் சொல்கிறார் சுவாமி
சென்னை:
டெஹல்கா டாட் காம் பல அரசியல் தலைவர்களும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் ஆயுத பேர ஊழலில்ஈடுப்பட்டிருப்பதாக வீடியோ பட ஆதாரத்துடன் கூறியுள்ஹதால் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்துநாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் சுப்ரமணியம் சுவாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல்குற்றச்சாட்டுகளை வீடியோ பட ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பதன் மூலம் டெஹல்கா டாட் காம் நாட்டிற்கு சிறந்தசேவை ஆற்றியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ராஜனிமா செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தல் அறிவிக்க வேண்டும்.மக்களுக்கு சிறந்த மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அவசியம். ஏனென்றால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோனியாகாந்தியும் அவரது இத்தாலிய குடும்பத்தினரும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த புகார்களை மத்திய இணை அமைச்சர் வசுந்தரா ரஜேக்கு அனுப்பியுள்ளேன். அவர் இது குறித்து விசாரணைசெய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக எனக்கு பதில் அனுப்பியுள்ளார்என தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!