தேர்தல் நிதி தராவிட்டால் அடி: இது பாமக ஸ்டைல்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தேர்தல் செலவுக்காக கேட்ட பணத்தை கொடுக்க மறுத்த கேஸ் நிறுவன ஊழியர்கள் இரண்டு பேரை, பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமைதாக்கினர்.
மதுராந்தகத்திற்கு அருகே இருக்கும் கண்ணாபிராமபுரதின், பா.ம.க. மாவட்ட செயலாளர் புலிகுடிவனம் ராஜேந்திரன் தன் ஆதரவாளர்கள் 10 பேருடன்தேர்தல் பணிக்காக பணம் வசூலிக்க சென்றார்.
அவர் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள கேஸ் நிறுவனத்துக்குச் சென்று அங்கு பணி புரிந்து வந்தவர்களிடம் தேர்தல் செலவுக்காக ரூ 25,000 கேட்டார்.ஊழியர்கள் பணம் தர மறுத்ததால் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கேஸ் நிறுவன ஊழியர்களை தாக்கினர்.
காயமடைந்த கேஸ் நிறுவன ஊழியர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications