ஆயுத பேர ஊழல் : ராணுவ குழு விசாரிக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாதுகாப்புத் துறையில் ஆயுத பேர ஊழல் நடந்திருப்பதாக தெஹல்கா டாட் காம் என்றஇன்டர் நெட் நிறு வனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய 3ராணுவ அதிக்ாரிகள் கொண்ட விசாரணை குழுவை அமைக்க இந்நிய ராணுவம் முடிவுசெய்துள்ளது.

இது குறித்து ராணுவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த விசாரணை மூத்தலெப்டினன்ட் ஜெரனரல் தலைமையில் நடைபெறும. அந்த குழுவில் இரண்டு மேஜர்ஜெனரல்களும் இடம் பெறுவார்கள். இந்த குழு தனது பணியை திங்கள்கிழமைதொடங்கும்.

இந்த குழுவுக்கு தலைவராக இருப்பவர் தற்போது ராணுவ தலைமையகத்தில்முக்கியமான துறைக்கு தலைவர் பொறுப்பை வகித்து வருபவர். விசாரணை குழுவில்அங்கம் வகிக்க இருப்பவர்கள் பெயரை குறிப்பிட இயலாது.

தெஹல்கா டாட் காமால் குற்றம் சாட்டப்பட்ட மூன்று ராணுவ அதிகாரிகளும் இன்னும்டெல்லி வந்து சேரவில்லை. ஒருவர் தற்போது மத்தியபிரதேசத்தில் பணியாற்றிவருகிறார். மற்ற இருவரும் விடுமுறையில் இருக்கிறார்கள்.

விசாரணை குழு அமைக்கும் முடிவு புதன்கிழமை எடுக்கப்பட்டது. ஆனால் விசரணைகுழுவுக்கு தகுதியான தலைமை அதிகாரியை கண்டு நியமிப்பதில் கால தாமதம்ஏற்படடு வருகிறது.

தெஹல்கா டாட் காம் நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவர் மிகமுக்கியான பதவி வகிக்கும் மூத்த லெப்டினனட் ஜெனரல். இதனால் இவரை விசாரணைசெய்யும் அதிகாரி இவரை விட மூத்த அதிகாரியாக இருக்க வேண்டும்.

இன்னும் இரண்டு வாரங்களில் பணியிலிகுந்து ஓய்வு பெறவிருக்கும் மூத்தலெப்டினன்ட் ஜெனரல் விசாரணைக்குழுவுக்கு தலைவராக இருக்க தகுதியானவர் எனகருதப்படுகிறார் என கூறினர்.

தெஹல்காடாட் காம் நிறுவனம் ஆயுத பேர ஊழல் தொடர்பான செய்திகளைசெவ்வாய்க்கிழமை வெளியிட்டது அப்போது ஜெனரல் பத்மநாபன் உத்தராஞ்சல்மற்றும் மத்தியபிரதேசத்திற்ல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருநதார்.

அவர் வியாழக்கிழமைதான் டெல்லி திரும்பினார். அவர் டெல்லி திரும்பியவுடன்ராணுவத்துறை அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+