இவருக்கு கறுப்பு பிடித்தது அதனால் சிறை கிடைத்தது
கும்பகோணம்:
சினிமா பாட்டுபாடி ஈவ்டீசிங் செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கும்பகோணம் செம்போடை பகுதியில் வசித்து வருபவர்கள் பிலிப்ராஜ் (25),அருள்ஜெஸ்சி (20) தம்பதியினர். அதே பகுதியில் வசித்து வருபவர் சில்வர்பட்டரையில் பணிபுரியும் ரமேஷ் (21).
சென்ற ஆண்டு அருள்ஜெல்சி வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது அவரைபார்த்து ரமேஷ் கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு என்ற சினிமா பாட்டுப்பாடிகிண்டல் செய்தார்.
இது குறித்து ஜெல் சி போலீசில் புகார் செய்தார், புகாரின் பேரில் விசாரணை செய்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேகாராணி ரமேஷை கைது செய்து ஈவிடீசிங் வழக்குபதிவு செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயராமன் ரமேஷுக்கு 2 மாதம் சிறை தண்டனையும், ரூ250 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Click it and Unblock the Notifications
