விடுதலை சிறுத்தைகளுக்கு 7 தொகுதிகள்: அள்ளி வழங்கியது தி.மு.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைளுக்கும் இடையேதேர்தல் தொகுதி உடன்பாடு வெள்ளிக்கிழமை எட்டப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் தி.மு,க தேர்தல் பணிக்குழு தலைவர் ஆற்காடுவீராசாமி கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும்,தி.மு.க.தலைவர் கருணாநிதியும் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர் என்றார்.

விடுதலை சிறுத்தை அமைப்பினர் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட விருப்பம்தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருமாவளவன் கூறுகையில் தி.மு.க. சின்னமான உதயசூரியன் வெற்றிசின்னம். எனவே நாங்கள் அந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்.எங்களுக்கு7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது திருப்தி அளிக்கிறது என்றார்.

கொங்கு வெள்ளாளர் சமூகத்தினாரால் தொடங்கப்பட்டகொங்கு நாடு மக்கள்கட்சிக்கும், தி.மு.க.வும் இடையேயும் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சி பொதுச்செயலாளர் ராஜாவும், முன்னாள் எம்.பி. குப்புசுவாமியும் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது வரை தி.மு.க. நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின்படி பா.ஜ.கவுக்கு 23தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுககு 7 தொகுதிகளும், மக்கள் தமிழ் தேசம்கட்சிக்கு 6 தொகுதிகளும், தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத்திற்கு 3 தொகுதிகளும்,தமிழ்நாடு முத்தரையர் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி,தொண்டர் காங்கிரஸ்,கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை ம.தி.மு.க.வுடனும், தமிழக ராஜீவ் காங்கிரசுடனும், எம்ஜிஆர்அ.தி.மு.க.வுடனும் எந்தவிதமான தொகுதி உடன்பாடும் ஏற்படவில்லை.

ம.தி.மு.கவுக்கும். தி.மு.கவுக்கும் இடையே 2 சுற்று பேச்சுவார்த்தை முடிந்த பின்னும்எந்த விதமான ஒப்பந்தமும் ஏற்படவில்லை. ம.தி.மு.கவினர் 30 தொகுதிகள் கேட்டுவருகிறது.

முன்னதாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தொகுதி பங்கீடு குறித்துபேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த விதமான ஒப்பந்தமும் ஏற்படவில்லை.தொடர்ந்து சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என அக் கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+