டாக்டரைத் தாக்கிய மூவர் அணிக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர் செல்லப்பாவை 3 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை தாக்கியது.
இதில் டாக்டர் செல்லப்பாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், டிரஸ்ட் புரத்தில் தனது வீட்டு வாசல் அருகே டாக்டர் செல்லப்பா தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது உருட்டுக்கட்டைகளுடன் வந்த கும்பல் ஒன்று அவரைச் சராமரியாகத் தாக்கியது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்ண்த் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கான பின்னணி விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைத் தேடி வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications