விவசாயமும் ஒரு தொழிலே....

Subscribe to Oneindia Tamil

கோவை:

விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரித்து தேவையான அடிப்படை வசதிகளை அரசு அளிக்க வேண்டும் என கோவையில் நடந்த தேசிய விவசாய இயக்கத்தின்சேர மண்டல மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் முன்னாள் சி.பி.ஐ.டைரக்டர் கார்த்திகேயன், அரசியல் வாடையே இல்லாத ஒரு விவசாயிகள் சங்கத்தை துவக்கினார்.

இந்த தேசிய விவசாயிகள் இயக்கதின் பிரதிநதியாகச் செயல்பட்டு, மத்திய மாநில அரசுகளிடம் தேவையான உதவிகளைப் பெற இவர் முடிவு செய்துள்ளார்.

இந்த விவசாயிகள் இயக்கத்தின் முதல் மாநாடு சேரமண்டலமான கோவை நகரில் நடந்தது. இந்த மாநாட்டில், கார்த்திகேயன் கலந்து கொண்டுபேசியதாவது:

உலகின் போக்கிற்கு ஏற்ப இந்திய வேளாண்மையில் எவ்வித ஆராய்ச்சியும் நடக்கவில்லை. அரசு விவசாயிகளுக்கு அளிக்கும் எந்த திட்டம்விவசாயிகளைச் சென்றடைவதில்லை.

வேளாண்மைத் துறை, பொதுப் பணித் துறை ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே பாசன நீர் மேம்பாடு அடையும்.

பாசன நீர் மேலாண்மையை மேலை நாடுகள் கடைபிடித்து வெற்றி கண்டுள்ளன.

விவசாயிகளுக்கென ஒரு இணையத் தளம் ஒன்றை அரசு ஏற்படுத்தி அதில் விவசாயிகளுக்கு அறிவிக்கும் திட்டங்களை வெளியிட வேண்டும்.

அடுத்த உலகப் போர் தோன்றுமானால் அது தண்ணீர் பங்கீட்டிற்காகத் தான் இருக்கும் எனச் சொல்கின்றனர். இத்தகைய நிலை உருவாகாமல் தடுக்கவேண்டும் என்றால், தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்றார்.

இந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். இந்த தொழிலுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும்.

இலவச மின்சாரத்தை தொடர வேண்டும். கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய நதிநீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பயிர்வாரி தீர்வையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உழவர் சந்தை சிறப்பாக உள்ளது. இத்திட்டத்தில் உள்ள சிறு சிறு குறைபாடுகளைக் களையவேண்டும்.

நாடு முழுவதும் உள்ள சீமைக் கருவேல் மரங்களை வெட்டியெடுத்து விட்டு, புளி, வேம்பு போன்ற மரங்களைப் பயிரிட வேண்டும் போன்ற 24தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+