தொழிலதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
கோவை:
தொழிலதிபர் வீட்டில் அதிகாலையில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 194 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களைப் போலீசார்தேடி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி, 3 வது குறுக்குத் தெருவில் தொழிலதிபர் ராஜாராம் (50) வசித்து வருகிறார். இவர் மொத்த நூல் வியாபாரம் செய்துவருகிறார்.
இவரது பங்களாவில் அதிகாலை 3.30 மணி அளவில் நான்கு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்தது. வீட்டிற்குள் செல்ல மாடியில் உள்ள ஜன்னலைப்பயன்படுத்தி உள்ளே நுழைந்தனர். பின்னர் தரைத் தளத்தை அடைந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராஜாராம், மற்றும் அவரது மனைவி அம்பிகாவைஎழுப்பினர்.
வந்திருந்தவர்கள் முகமூடி அணிந்திருந்ததால், வந்திருப்பவர்கள் கொள்ளையர்கள் என்பதை உடனே புரிந்து கொண்டனர். உடனே கொள்ளையர்கள், சத்தம்போட்டால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும், நகை, பணம் உள்ள இடத்தைக் காட்டுமாறு கூறியுள்ளனர்.
ராஜாராம் சற்றுத் தயங்கினாலும், கொள்ளையர்களின் மிரட்டலுக்குப் பயந்து பீரோவைத் திறந்து காண்பித்துள்ளார். அப்போது அங்கிருந்த 6 லட்ச ரூபாய்மதிப்புள்ள 194 பவுன் நகையை அள்ளிக் கொண்டனர்.
அப்போது அவரது மகன் மற்றும் மருமகள் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். கொள்ளையர்கள் அவர்களைப் பார்த்து மிரட்டி விட்டு மாடிவழியே கீழே குதித்து இறங்கினர்.
பின்னர் வந்த வழியே தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் ராஜாராம் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய்ஆகியவை வரவழைக்கப்பட்டது. சோதனைக்கு பின் போலீசார், கிடைத்த தடயங்களை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்கத்தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications