சென்னை டெஸ்ட்டில் ஆஸி.வீரர் சதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் துவங்கிய 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் போட்டியில் ஆஸி.அணியின் மாத்யூ ஹைடன் சதமடித்தார்.

சென்னை டெஸ்ட்டின் முதல் நாள் ஆஸி. அணிக்கு சாதகமாகவே இருந்தது. முதலில் டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. முதல் நாள் ஆட்டத்தின்இறுதியில் 3 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை எடுத்தது ஆஸி.அணி.

சென்னையில் ஞாயிற்றக் கிழமை துவங்கிய டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. விக்கெட் கீப்பர் நயன்மோங்கியாவிற்கு பதில் சமீர் திகே களம் இறக்கப்பட்டார்.

வெங்கடேஷ் பிரசாத் மற்றும் வெங்கடபதி ராஜு ஆகியோருக்கு பதிலாக சாய்ராஜ் பகுதுலேவும், நிலேஷ் குல்கர்னியும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

ஆஸி. அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மாத்யூ ஹைடன் தனது 3வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இந்த தொடரில் ஹைடனின் 2வதுசதமாகும் இது.

ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது ஆஸி.அணி. எனினும், பின்னர் சமாளித்து ஆடிய ஹைடன், ஜஸ்டின் லாங்கர், மற்றும் மார்க்வாஹ் ஆகியோர் இந்திய பந்துவீச்சை சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக மாற்றினர்.

70 ரன்கள் எடுத்து இருந்த மார்க் வாஹ் விக்கெட்டை புதிதாக களம் இறங்கிய சாய்ராஜ் பஹுதுலே கைப்பற்றினார். ஜாகீர்கான் மற்றும் ஹர்பஜன் சிங்ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் ஹைடன் 147 ரன்களும், ஸ்டீவ் வாஹ் 43 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+