தொகுதிப்பங்கீடு: திமுக - மதிமுக இன்று பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தொண்டர்களின் உள்ளம் காயப்படாத வகையில் தொகுதிகளைப் பெறுவோம் என ம.தி.மு.க பொதுச் செயலர்வைகோ உறுதியளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் நேரடியாகப்பேச்சுவார்த்தை நடத்துகிறார் வைகோ.

ஈரோட்டில் தொண்டர்களிடையே ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:

தொகுதிப் பங்கீடுமுடியும் வரை காத்திருக்காமல், இப்போதே தேர்தல் பணியைத் துவங்குங்கள். சேதாரம்இல்லாமல் கவுரவமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளைப் பெறலாம்.

இதில் தொண்டர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. பிற கட்சிகளுடன் நம்மை ஒப்பிட்டுதொகுதி கேட்கக் கூடாது. நமது பலம் என்ன, வளர்ச்சி எப்படி என்பதைத் தெரியப்படுத்தித்தான் தொகுதியைக்கேட்க முடியும்.

தனித்துப் போட்டியிடுவது, பா.ஜ வேட்பாளர்களை மட்டும் ஆதரிப்பது, பா.ஜ வேட்பாளர்கள் போட்டியிடும்தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது போன்ற அனைத்து மாற்று ஏற்பாடுகளும்நிராகரிக்கப்படுகிறது. இதற்காக வருத்தப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகோ.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

இது தொடர்பான எந்த தகவலையும் வெளியிட முடியாது. எத்தனை இடம் கேட்கிறோம், எந்த தொகுதிகளில்வெற்றி வாய்ப்புள்ளது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். ம.தி.மு.க.,விற்கென்று ஒரு கொள்கைஉள்ளது. அந்தக் கொள்கையின்படி நடந்து கொள்வோம். முதல்வர் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைக்குஅழைத்துள்ளார் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+