வாஜ்பாய் அரசு பதவி விலக புதுவை காங். கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

ஆயுதப் பேர ஊழலில் தொடர்புள்ள வாஜ்பாய் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாண்டிச்சேரிஇளைஞர் காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து பாண்டிச்சேரி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிக்கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாங்கள் ஊழலற்ற கட்சி என்று கூறி வந்த பாஜக தற்போது ஆயுதப் பேர ஊழலில் சிக்கிப் பரிதவித்து வருகிறது.பாஜக மதவாதக் கட்சி மட்டுமல்ல. ஊழல் கட்சியும் கூட.

பாஜக வுக்கு ஆதரவளித்து வரும் திமுக, மதிமுக, தெலுங்கு தேசம் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்துவிலக வேண்டும்.

வாஜ்பாய் உடனடியாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்மம்தா பானர்ஜி தங்கள் ஆதரவை வாபஸ் பெறறுக் கொண்டது மிகவும் சந்தோஷப்பட வைக்கிறது.

வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாண்டிச்சேரி இளைஞர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்துபோராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+