கோவையில் உருவாகிறது டைடல் பார்க்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சென்னையில் உள்ள ""டைடல் பார்க் கைப் போன்ற ஒரு சாஃப்ட்வேர் பூங்காவை அமைப்பதற்காக முதற்கட்டஆயத்த பணிகள் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை எம்.பி தலைமையிலான குழு இடத்தைப் பார்வையிட்டது.

கடந்தமாதம் சுதேசி இயக்கத்தின் பொருள் விற்பனைக் கண்காட்சிக்கு மத்திய அமைச்சர் பிரமோத் மாகாஜன்கோவை வந்திருந்தார்.

அப்போது கோவை மக்களின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் கோவையில் ஒரு சாஃப்ட்வேர் பூங்காஉருவாக்க வேண்டும் என்பதாகும்.

இதனை இரண்டு வார காலத்திற்குள் வழங்க உறுதியளித்த பிரமோத் மகாஜன், இதற்கான இடத் தேர்விற்காகடெல்லியிலிருந்து ஒரு நிபுணர் குழுவை அனுப்பி வைத்தார்.

இந்த உயர் மட்டக் கமிட்டியில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர்லட்சுமிநாராயணன், இந்திய சாஃப்ட்வேர் பூங்காவின் இயக்குநர் எஸ். என் ஜின்டால், தமிழ்நாடு சாஃப்ட்வேர்பூங்காவின் இயக்குநர் ராஜலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், கோவை எம்.பி. ராதாகிருஷ்ணன்தலைமையில் மாவட்ட கலெக்டர் சந்தானம் ஆகியோர் இடத்தைப் பார்வையிட்டனர்.

இங்கு சென்னையில் உருவாக்கப்பட்ட டைடல் பார்க் சாஃப்ட்வேர் பூங்காவைப் போல, கோவையிலும் உருவாக்கத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பரிந்துரைகளை இந்தக் குழு மத்திய அரசிடம் அளிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+