ராணுவம் சுட்டு 6 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கை யாழ்ப்பாணத்தில் 6 புலிகளை சுட்டுக் கொன்றதாகவும், நாகர்கோவிலில் உள்ள புலிகளின் இரண்டு பதுங்கு குழிகளை அழித்து விட்டதாகவும்ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே மேலும் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை மாலை புலிகளின் பதுங்கு குழிகளை நோக்கி மிஷின் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களால் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது புலிகளும் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் பல மணி நேரங்கள் சண்டை நடந்தது. இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் சிலருக்குக்காயம் ஏற்பட்டது. 6 புலிகள் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை அரியாளி பகுதியில் விடுதலைப்புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டுகளை ராணுவ வீரர்களை நோக்கி வீசித்தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சாவகச்சேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் சந்திரிகா பேட்டி:
இதற்கிடையே, புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில்அரசியல் சட்ட திருத்த மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா திங்கள்கிழமை தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து சந்திரிகா குமாரதுங்கா கூறியதாவது:
இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வரும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தமசோதா கொண்டு வர வேண்டும் என்று புலிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோதுபெரும் அமளி ஏற்பட்டது. புத்த பிட்சுக்கள், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பல கட்சிகள் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் இந்த அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅரசியல் சட்டதிருத்த மசோதா நிறை வேற்றப்படவில்லை.
இந்நிலையில், விடுதலைப்புலிகள் தனி ஈழம் கோரிக்கையைக் கைவிட்டு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதி ஏற்படவும்,இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் இலங்கை அரசு முயலும்.
இவ்வாறு சந்திரிகா கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications