எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மக்கள் பெரும் ஆதரவு
டெல்லி:
ஆயுதப்பேர ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக அரசுக்கு, இந்தியா முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்று இந்தஊழல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.
டெல்லியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று 4 மெட்ரோபாலிடன் நகரங்களில் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆயுத பேர ஊழல் தொடர்பான சர்வேயில் பங்கு கொண்ட மக்களில் 47 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் சரியே என்று கூறியுள்ளனர்.
கருத்துக்கணிப்பில் வாக்களித்த 49 சதவீத மக்கள், இந்த ஆயுத பேர ஊழலில் பாதுகாப்பு அமைச்சரை குற்றவாளியாக கருதுகின்றனர்.
பால்கோ நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் ஆயுத பேர ஊழலில் பிரதமர் அலுவலகத்தின் பங்கும் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான தேசிய ஜனநாயக கூட்டணி பதவி விலக வேண்டும் என மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே கோரினர்.
இதற்கு காரணம் மாற்று அரசு அமைக்கக் கூடிய அளவிற்கு தற்போது வேறு கட்சிகள் நாட்டில் இல்லை.
மூன்றாவது அணி அமைந்தால் மீண்டும் பழைய குழப்பங்கள், ஆட்சி கவிழ்ப்பு போன்றவை நிகழும். எனவே தற்போதைய ஆட்சியே நீடிக்கட்டும் எனமக்கள் முடிவு எடுத்து இருக்கலாம்.
நேர்மையான மனிதரான வாஜ்பாயின் அரசில் இத்தகைய ஊழல் வெளிப்பட்டு உள்ளது. இருந்த போதும் வாஜ்பாய் பிரதமராக தொடர 55 சதவீதமக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு 24 சதவீத மக்களும், 3 வது அணிக்கு தலைமை தாங்கியுள்ள ஜோதிபாசுவுக்கு 18 சதவீத மக்களும்ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மக்கள் டெஹல்கா டாட் காம் பிரச்சனையை, வாஜ்பாய் சரியான முறையில் கையாண்டதாக தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications