வைகோ நெருக்கடிக்கு பணிந்த கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக வை விட எங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கினால்தனித்துப் போட்டியிடுவோம் என்று மதிமுக தொண்டர்கள் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில்மதிமுகவுக்கு 21 இடங்களை திமுக ஒதுக்கியுள்ளது.

திமுகவில் ஸ்டாலினின் வளர்ச்சிக்கு இடைஞ்சலாகக் கருதப்பட்ட வைகோ, கருணாநிதியால் ஓரங்கட்டப்பட்டார்.இறுதியில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேற்றப்பட்ட பின் கருணாநிதியும், மாறனும் சேர்ந்து தனக்கு எதிராக சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கூறினார் வைகோ.

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.பின்னர் அதிமுக வுடன் கூட்டணி அமைத்து 4 எம்.பி.தொகுதிகளை வென்றார். அப்போது அதிமுக கூட்டணிமத்தியில் பாஜக வுக்கு ஆதரவு அளித்து வந்தது.

அதிமுக வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற போதிலும் மதிமுக தொடர்ந்து பாஜகவுடனேயே இருந்தது. பின்னர் கருணாநிதி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் திமுக கூட்டணியில் சேர்ந்தார்வைகோ.

அதாவது அரசியல் நிர்பந்தம் காரணமாக திமுகவிலேயே சரணடைந்து அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது,நிரந்தர நண்பனும் கிடையாது என்பதை நிருபித்தார்.

திமுக கூட்டணியில் இணைந்த போதிலும் வைகோவும், ஸ்டாலினும் ஒருவரையொருவர் எதிரியாகப் பார்த்துக்கொள்ளும் நிலையே நீடித்து வருகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தாங்கள்தான் இரண்டாவது மிகப்பெரிய கட்சி என்று பாஜக கூறி வந்தது.இந்நிலையில் தான் 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. தொகுதிப்பங்கீடுபேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் பாஜக வுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தது. அவர்களுக்கு 23 இடங்களை கருணாநிதிஒதுக்கினார்.

இதையடுத்து பாஜக வை விட எங்களுக்கு அதிக தொகுதிகள் தர வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியது.

ஆனால், கருணாநிதியோ மதிமுக வுக்கு 10 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தார்.

தொகுதிப்பங்கீடு தொடர்பாக மதிமுக தேர்தல் குழு உறுப்பினர்கள் செஞ்சி ராமகிருஷ்ணன், இல.கணேசன்ஆகியோர் திமுக தேர்தல் குழு உறுப்பினர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை.

வைகோவோ, தொண்டர்கள் மனம் காயப்படாதவாறு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறி தெளிவாகக்கூறி விட்டார். கூடுதல் இடங்கள் தராவிட்டால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிடலாம் என மதிமுகஇரண்டாம் மட்டத் தலைவ்ரகளும் தொண்டர்களும் வைகோவை வற்புறுத்தினர்.

திமுக கூட்டணியில் இருந்து யார் வந்தாலும் அணைத்துக் கொள்ள காத்திருக்கும் அதிமுக குறித்த பயமும்கருணாநிதிக்கு இல்லாமல் இல்லை. ரொம்பவும் கேவலப்படுத்தினால் திமுக கூட்டணியை விட்டு மதிமுக பிரிந்துவிடுமோ என்ற அச்சமும் திமுகவிடம் தொடர்ந்து இருந்து வந்தது.

ஏனெனில், பாஜக மீதான ஆயுத பேர ஊழல், தமிழ்நாட்டில் திமுக அரசு மீது கூறப்பட்டு வரும் பாலங்கள்கட்டுவதில் நடந்த ஊழல், ஸ்டாலின் சொத்துக் குவிப்பு, சிமெண்ட் விலை ஊழல், அமைச்சர்களின் உறவினர்கள்மீதான நில ஆக்கிரமிப்பு ஊழல், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மீதான கட்டப் பஞ்சாயத்து புகார்கள்,அதிகாரிகளை அடித்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் ரெளடித்தனம் போன்றவற்றால் மக்கள் மத்தியில்விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளும் நிலையில் உள்ளது திமுக.

மேலும் திமுக விலிருந்து பாமக வெளியேறியது இந்தக் கூட்டணியின் வலது கை முறிந்தது போல் ஆகிவிட்டது.இந் நிலையில் மதிமுகவும் விலகிப் போய் அதிமுகவிடம் அடைக்கலம் சேர்ந்தால் என்ற பயம் திமுகவைஆட்டியது.

இதையடுத்து நிதானமாக ஆலோசனை நடத்தி சமாதானமாகப் பேசி வைகோவுக்கு 21 இடங்களைக் கொடுத்துமதிமுகவுக்கு அடிபணிந்துள்ளது திமுக.

வைகோவும் தொண்டர்களை சமாதானப்படுத்தி தங்கள் கட்சிக்கும், பாஜக வுக்கும் சம அளவிலான இடங்கள்இருக்கும் படி பார்த்துக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைமையகமானஅண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவரை சென்னை மேயர் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள்வரவேற்றனர். அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வைகோ பேசினார்.

பேச்சுவார்த்தை முடிவில் மதிமுகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் கருணாநிதியும், வைகோவும் கையெழுத்திட்டனர்.

ஆனால், இதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைகோவுடன் இருந்த ஸ்டாலினின் முகத்தில்மட்டும் ஏதோ கோபமும் வருத்தமும் தென்பட்டது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

திமுகவுக்கும் மதிமுகவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக 2001 ம் ஆண்டு ஏப்ரல்அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் மதிமுக தமிழகத்தில் 21 தொகுதிகளில்போட்டியிடும்.

எந்தெந்த தொகுதிகளில் மதிமுக போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு ஒப்பந்தத்தில்கூறப்பட்டிருந்தது.

கருணாநிதி பேட்டி:

பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்றிருப்பதால், எல்லாக் கட்சிகளுக்கும் தொகுதி தர வேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டதொகுதிகளில் 2 தொகுதிகளை விட்டுத் தர பா.ஜ.க.விடம் கோரியிருந்தோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு2 தொகுதிகளை விட்டுக் கொடுத்தார்கள்.

கே: இதுதொடர்பாக பாஜக வுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?

ப: இதுதொடர்பாக பேசுவதற்காக ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் பா.ஜ.க. தலைவர்களை நேரில்சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்கள். பின்னர் அவர்களே நேரில் வந்து 2 தொகுதிகளைத் தருவதாக கூறி விட்டுச்சந்தோஷமாக சென்றார்கள்.

கே: யார் இரண்டாவது இடம் என்பதில் பிரச்சனையா?

ப: 2-வது இடம் யாருக்கு என்பதில் பிரச்சினையில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறோம்.

கே: புதிய தமிழகம் கட்சியோடு எப்போது பேசப் போகிறீர்கள்?

ப: டாக்டர் கிருஷ்ணசாமி கோவை சென்றுள்ளார். அவர் வந்தவுடன் புதிய தமிழகம் கட்சியுடன் உடன்பாடுமேற்கொள்ளப்படும்.

கே: புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?

ப: புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை.

கே: அதிக அளவு கட்சிகள் உங்கள் கூட்டணியில் சேர்ந்திருப்பதால் திமுக 160 அல்லது 150 இடங்களில்போட்டியிட இயலாது என்று தெரிகிறதே?

ப: ஆலோசிப்போம்.

கே: எம்.ஜி.ஆர்.அதிமுக வுடன் பேசப்பட்டு விட்டதா?

ப: மொத்தப் பட்டியலும், யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது இன்னும் இரண்டு நாட்களில்வெளியிடப்படும்.

இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியில் கூறினார்.

வைகோ பேட்டி:

பின்னர் வைகோவிடம் கேட்டபோது, இந்த உடன்பாட்டில் எனக்குப் பூரண மகிழ்ச்சி. பா.ஜ.கவை விட அதிக சீட்கோரியதால், தொகுதிப் பங்கீட்டில் தாமதம் ஏற்படவில்லை. யார் முதல், யார் இரண்டாவது என நாங்கள்வரிசைப்படுத்தவில்லை.

இந்த அணியில் எந்தக் கட்சி இரண்டாவது பெரிய கட்சி என்பதில் பிரச்சனை இல்லை. பாஜக வுக்கும், எங்களுக்கும்சுமூகமான உறவு நிலவுகிறது. எங்களிடையே எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை.

இந்தப் பேச்சுவார்த்தையில் எங்களது தேவைகளை அறிந்து முதல்வர் கருணாநிதி பூர்த்தி செய்துள்ளார். மகிழ்ச்சிஎன்கிற போது அதற்குள் திருப்தியும் அடங்கி விடும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+