கள்ளச்சாராய வேட்டையில் 90 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்ட மதுவிலக்கு போலீசாரால் 30 பெண்கள் உள்பட 90 பேர்கைது செய்யப்பட்டனர்.
கள்ளச்சாரயத்தை அடியோடு ஒழிக்கும் பணியில் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.இதனடிப்படையில் காஞ்சிபுரத்திலுள்ள மதுவிலக்கு போலீசார் மணிவாக்கம், நடுவீரப்பட்டி, சுனம்பேடு மற்றும்கடலூர் பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ள்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 30 பெண்கள் உள்பட 90 பேரை கைது செய்தனர். அப்போதுபூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்ட்டிருந்த 10,000 லிட்டர் சாரயத்தையும் கண்டுபிடித்து அழித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications