நான் தவறு செய்யவில்லை: பிரஜேஷ் மிஸ்ரா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆயுத பேர ஊழலில் தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பிரதமர் விரும்பினால் பதவி விலகுவோம் என பிரதமரின்முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரி என்.கே.சிங் ஆகியோர் தெரிவித்தனர்.

பல்வேறு அமைப்புகளும் இவர்களது ராஜினாமாவை கோரும் போது இவர்கள் இவ்வாறு தெரிவித்து இருப்பது, இவர்கள் பதவியில் தொடர பிரதமர்அனுமதித்து விட்டார் என்பதை காட்டுகிறது.

மத்திய அரசை அலைக்கழித்து வருகிறது தெகல்கா டாட் காம் நிறுவனம் வெளிப்படுத்திய ஆயுத பேர ஊழல்.

இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட பிரதமரின் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலக தனி அதிகாரி என்.கே.சிங்இருவரும் டெல்லியில் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது தங்கள் மீது பல்வேறு ஊழல் ற்றச்சாட்டுகளை மறுத்து பேசினர். நிருபர்களிடம் அவர்கள் தெரிவித்த தகவல்கள்:

ஆயுத பேரம் குறித்து பிரதமர் எங்களிடம் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை. பா.ஜ.க.வின் கட்சி தலைவராக இருந்த பங்காரு லட்சுமணும் இது குறித்துஎதுவும் தெரிவிக்கவில்லை.

ஆயுதங்கள் விற்பனை தொடர்பான விசயங்கள் எதிலும் நாங்கள் தலையிடவில்லை. தெகல்கா டாட் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும்ஆதாரமற்றவை. எங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே இது என தெரிவித்தனர்.

பிரதமரின் கரத்தை வலுப்படுத்தும் என்றால் பத விலகத் தயாராக இருப்பதாக பிரதமரின் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா தெரிவித்தார்.

கடந்த 1999ம் ஆண்டு போக்ரான் குண்டு வெடிப்பிற்குப் பின் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ்.அதிகாரியான மிஸ்ரா.

பிரதமர் விரும்பும் வரை இந்த பணியில் தொடர்ந்து நீடிப்பேன் என்றார் பிரதமரின் பொருளாதாரத் துறை ஆலோசனைக்கான தனிஅதிகாரி என்.கே.சிங்.இவர் முன்னதாக நிதி அமைச்சக அதிகாரியாக பணியாற்றியவர்.

தெகல்கா டாட் காம் நிறுவனம் வெளிப்படுத்திய ஆயுத பேர ஊழலால் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலகி விட்டார். பிரஜேஸ்மிஸ்ராவும், என்.கே.சிங்கும் பதவி விலக வேண்டும் என சமதா கட்சியினர் கோரி வருகின்றனர்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக சிலருடைய பதவிகள் பிரதமர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன. அவர்கள் இந்த ஊழலுக்கு பொறுப்புஏற்று பதவி விலக வேண்டும் என்று மிஸ்ராவையும், சிங்கையும் மறைமுகமாக குறி வைக்கிறது பா.ஜ.க.வின் ஒரு அங்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் சுதேசி கொள்கைகளை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்., சுதேசி ஜாக்ரான் மஞ்ச் போன்ற பா.ஜ.க. ஆதரவுஅமைப்புகளின் கோரிககைகளை மிஸ்ராவும், சிங்கும் கண்டு கொள்ளாததால் அவர்களை பதவி விலக கோருகின்றன இந்த அமைப்புகள்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+