தொடர்ந்து 5-வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆயுத பேர ஊழல் விவகாரம் பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து வாஜ்பாய்அரசு பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றம்ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 5-வது நாளாக மீண்டும்செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

தெஹல்கா டாட் காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் பல அரசியல் தலைவர்களும்ஆயுத பேர ஊழலில் ஈடுபட்டிருப்பதாக வீடியோ பட ஆதாரங்களுடன் சமர்பித்தது.

இதையடுத்து வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள்தொடர்ந்து பாதிக்கப்ட்டுள்ளன.

சென்ற வாரம் புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களும் எதிர்கட்சிகளின்ஆர்ப்பாடம் காரணமாக நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. அதன் பின் திங்கள்கிழமைநாடாளுமன்றம் கூடவிருந்தது. அவைத் தலைவர் வரும் முன்னரே காங்கிரஸ்தலைமையில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 4-வது நாளாகநாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம்கூடியவுடனேயே வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என கோரி எதிர்கட்சிகள்வாஜ்பாயுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால்அவை கூடிய இரண்டு நிமிடத்திலேயே அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அவை 5-வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க வாஜ்பாய்அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டாலும் அதை ஏற்காத எதிர்கட்சிகள் வாஜ்பாய்அரசு பதவி விலக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளிலேயே குறியாக இருக்கிறதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+