தெஹல்கா எடிட்டரிடம் ராணுவம் விசாரணை
டெல்லி
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெஹல்கா டாட் காம் இன்டர் நெட்நிறுவனத்தின் தலைமை எடிட்டர் தருண் தேஜ்பால் விசாரணைக்காக ராணுவவிசாரணைக் குழு முன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
இந்த இன்டர் நெட் நிறுவனம் ஆயுத பேர ஊழலில் பல அரசியல் தலைவர்களும்,ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டது.இந்த குற்றச்சாட்டு குறித்து ராணுவம் விசாரணையை துவக்கியுள்ளது.
தெஹல்கா டாட் காம் தலைமை எடிட்டர் செவ்வாய்க்கிழ ராணுவ விசாரணைக்குழுவின் முன் ஆஜாரானார். அவரிடம் நான்கரை மணி நேரம் விசாரணைநடைபெற்றது.
இது குறித்து தேஜ்பால் கூறுகையில் ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி இந்தமாதம் 13-ம்தேதி வெளியிடப்பட்ட இரண்டு விஎச்எஸ் வீடியோ கேசட்டுகளைஒப்படைத்தேன்.
ஆயுத பேர ஊழல் விவரத்தை வெளிக் கொண்டு வந்த எங்கள் நிறுவனசெய்தியாளர்கள் அனுருதா பஹால், மேத்யூ சாமுவேல் ஆகிய இருவரையும்விசாரணை செய்ய வேண்டுமானால் அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்என்றார்.
இந்த விசாரணை ராணுவ தலைமையகத்தில் நடந்துத. விசாரணைக்கு லெப்டினன்ட்ஜெனரல் எஸ்,கே ஜெ.யின் தலைமை வகித்தார். மேஜர் ஜெனரஸ் மஹிந்தர் புரியும்,மேஜர் ஜெனரல் மேத்யூவும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications