திமுக வேட்பாளர் தேர்வு துவங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் செய்துள்ள திமுகவினரிடம் புதன்கிழமை நேர்காணல் துவங்கியது.

சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பி 5000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களை மாவட்ட வாரியாகநேர்காணல் செய்து அதன் மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி புதன்கிழமை நேர்காணல் நிகழ்ச்சி துவங்கியது. திமுக தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் விண்ணப்பம் செய்தவர்களிடம்கேள்விகள் கேட்டு அவர்கள் குறித்து அறிந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் உடன்இருந்தனர்.

காலை 9.30 மணிக்கு நேர்காணல் துவங்கியது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு ஆகியமாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது.

மாலை 4.30 மணிக்கு நடக்கும் இரண்டாவது பகுதி நேர்காணலில் காஞ்சீபுரம் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் தெற்கு ஆகியமாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடக்கும்.

மார்ச் 26-ம் தேதி வரை இந்த நேர்காணல் நிகழ்ச்சி நீடிக்கும். முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதிவாக்கில் வெளியாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

நேர்காணல் நிகழ்ச்சியையடுத்து அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+