தாமரைக்கனி சுயேச்சையாக போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு டிக் கெட் மறுத்துவிட்டதால், சுயேச்சையாகவோ அல்லது வேறு கட்சியில் இ ணைந்தோ போட்டியிடப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. தாம ரைக்கனி கூறியுள்ளார்.

அதிமுகவில் முக்கியப் புள்ளியாக ஒரு காலத்தில் இருந்தவர் தாம ரைக்கனி.எம்.ஜி.ஆர். காலத்தில் அவருடைய செல்லப் பிள்ளையாக வலம் வந்த தாமரைக்கனிஇப்போது ஜெயலலிதாவின் வேண்டாப்பிள்ளையாக மாறியுள்ளார்.

அவருக்குத் தற்போது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புமறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவருக்கு சீட் தர ஜெயலலிதா மறுத்து விட்டதாகஅவரே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு டிக்கெட் தர கட்சிக்காரர்கள் எதிர்ப்புதெரிவிப்பதாகவும், அதனால் சீட் தர முடியாது எனவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதை நான் ஏற்க மாட் டேன்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. எனவே நான் அங்குகண்டிப்பாக போட்டியிட்டு வெல்வேன். சுயேச்சையாக போட்டியிட்டு வெல்லக்கூடிய அளவுக்கு எனக்கு செல்வாக்கு உள்ளது.

இருப்பினும் அதற்குப் பதில் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து போட்டியிட விரும்புகிறேன். சில கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. எந்தக் கட்சி என்பதைஓரிரு நாட்களில் முடிவு செய்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் தாமரைக்கனி.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 1977 -ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை ந டந்ததேர்தல்களில் 5 முறை போட்டியிட்டு வென்றவர் தாமரைக்கனி என்பதுகுறிப்பிடத்தக்கது.

தொகுதியில் சொந்த செல்வாக்குப் படைத்தவர். அதிமுகவிலிருந்து வெளியேறி ஒருமுறை சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று தனது செல்வாக்கை நிரூபித்தவர்.பின்னர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.

சமீபத்தில் பசுவதையை எதிர்த்துக் குரல் கொடுத்தார். காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரி ன்அன்பையும் பெற்றார். கேரளா கடத்தப்பட்ட காளை மாடுகள் அடங்கிய லாரியைதடுத்து நி றுத்தி பரபரப்பு ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+