ஜம்முவில் துப்பாக்கிச்சூடு: 9 தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 9 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் போலீசாரையும், ராணுவ வீரர்களையும் நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.இதையடுத்து ராணுவ வீரர்களும், போலீசாரும் இணைந்து தீவிரவாதிகளை நோக்கி சராமரியாகச் சுட்டனர்.
இதில் 9 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றனர்.
தொடர்ந்து பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications