குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எதிர்க்கும் அலிகள்

Subscribe to Oneindia Tamil

பஸ்பதி(மேற்கு வங்கம்):

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு அலிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வடமாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் வசித்து வரும் அலிகள், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாகச் சென்றுகுழந்தையை வாழ்த்தி, ஆடிப்பாடி, ஜாதகம் கணித்துப் பணம் பெறுவது வழக்கம்.

மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டத்தால் ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அலிகளின்வருமானத்துக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அலிகள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எதிர்க்கின்றனர்.

உலகிலேயே இந்தியாவிலும், சீனாவிலும் மக்கள் தொகை மிக வேகமாகப் பெருகி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும்வகையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தி அமல்படுத்தி வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் இந்தியாவில் வசித்து வரும் 1.1 மில்லியன் அலிகள், மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் பஸ்பதியில் 5,000 க்கும் மேற்பட்ட அலிகள் கூடி, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யுங்கள்என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 50 வருடங்களாக மேற்கு வங்க மாநிலம் பஸ்பதி கிராமத்தில் கொண்டாடப்படும் கடவுள் கிருஷ்ணாவின் பிறந்தநாளில் இந்தியா முழுவதிலுமுள்ளஅலிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதே கிராமத்தில் கொண்டாடப்படும் முஸ்லீம் பண்டிகையான பாபா ஹஜூர் பண்டிகையிலும் இவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சப்னம் (47) என்ற அலி கூறுகையில், நான் 15 வருடமாக இங்கு நடக்கும் பாபா ஹூஜூர் எர் மஜார் பண்டிகையில் கலந்துகொள்கிறேன். இந்தப் பண்டிகை எப்படி தொடங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் மார்ச் 18 ம் தேதி தொடங்கி ஒரு வாரம்கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை.

மத்திய அரசின் மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டம் எங்களது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுவது போல் அமைந்துள்ளது. நாங்கள் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை எதிர்க்கிறோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதிக குழந்தைகள் இருப்பதையே விரும்புகிறோம்.

புதிதாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டுக்குச் சென்று அந்தக் குழந்தையை வாழ்த்தி அதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்கிறோம்.

பொதுவாக, புதிதாக பிறந்த ஒரு குழந்தையின் வீட்டுக்குச் சென்று ஜாதகம் கணித்து, அதை வாழ்த்தி பணம் பெறுகிறார்கள் அலிகள் என்றுகுற்றச்சசாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

நாங்கள், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்கிறோம். சம்பந்தப்பட்ட குடும்பத்தின் வருவாய்க்கேற்ப அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

நாங்களாக நிர்பந்தம் செய்து பணம் எதையும் வசூலிப்பதில்லை. அவர்கள் கொடுப்பதை மட்டுமே பெற்றுக் கொள்கிறோம் என்கிறார்.

புதிதாகக் குழந்தைகள் பிறக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் அழையாத விருந்தாளியாகவே இவர்கள் சென்று, புதிய குழந்தையை வாழ்த்தி பணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் 24 க்கும் மேற்பட்ட அலிகளை உத்தரப் பிரதேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வருகிறார்.

பிகார், டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து அலிகள் இங்குகூடுகின்றனர்.

இதில் மேற்கு வங்காளத்திலிருந்து கூடும அலிகள் 40,000 பேர். கொல்கத்தாவிலிருந்து வரும் அலிகளின் எண்ணிக்கை 500 ஆகும்.

அலிகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி ஆண்கள் பட்டியலில் சேர்க்கின்றனர். மும்பையைச் சேர்ந்த அலி சாந்தா கூறுகையில், மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் எங்களைப் பெண்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிறார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், நாங்கள் கிருஷ்ணா பூஜை மற்றும் பாபா ஹஜூர் பண்டிகையிலும் கலந்து கொள்வதைப் பார்த்து, அங்குவாழும் மக்கள் எங்களைக் கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.

அவர்களை நாங்கள் சட்டைசெய்வதில்லை. நாங்கள் பல வருடங்களாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். பொதுமக்கள் எங்களது பண்டிகையைநிறுத்தவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ கூடாது.

மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் சுசீலா என்ற அலி கூறுகையில், இந்த விழா எங்களுக்கு ஒரு சுற்றுலா மாதிரி. ஒவ்வொரு வருடமும் மேற்குவங்காளத்திற்கு வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

ஆங்காங்கே சிறு சிறு கூடாரங்கள் அமைத்தோ அல்லது மரத்தின் அடியில் தங்கிக் கொண்டே இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+