கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு 3 புதிய விமானங்கள்
சென்னை:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 3 புதிய விமானங்கள் சென்னைக்கு விடத் தீர்மானித்திருப்பதாகவும்,இது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் இந்தியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் இந்தியன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
வாரத்தில் மூன்று நாட்கள் சென்னை செல்லும் வகையில் 3 புதிய விமானங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்தவிமானங்களை அலையன்ஸ் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது. 3 புதிய விமானங்கள் செவ்வாய், வியாழன்மற்றும் சனிக்கிழமைகளில் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு செல்லும்.
இந்த விமானங்கள் 2.35 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும். மீண்டும்சென்னையிலிருந்து 1.55 மணிக்குப் புறப்படும்.
இதே போல் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்கொல்கத்தாவிலிருந்து புவனேஸ்வருக்கு நான்கு புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
கொல்கத்தாவிலிருந்து பாட்னா, லக்னோ வழியே டெல்லி செல்லும் அலையன்ஸ் விமானம் திங்கள், செவ்வாய்,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தற்போது அதிகாலை 6 மணிக்கு செல்கிறது. 6 மணிக்குச் செல்லும் இந்தவிமானங்கள் இனிமேல் காலை 8 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
கொல்கத்தாவிலிருந்து இம்பாலுக்குச் செல்லும் விமானம் காலை 9.45 மணிக்கு ஞாயிறு தவிர அனைத்துநாட்களிலும் செல்லும்.
கொல்கத்தாவிலிருந்து பாங்காக் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், செவ்வாய், வியாழன், சனி மற்றும்ஞாயிறுகளில் காலை 10.15 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
பெங்களூரிலிருந்து தினமும் கொல்கத்தாவிற்கு 8.25 க்கு வந்து கொண்டிருந்த விமானம் இனிமேல் 11.25 க்குவந்து சேரும். அதே போல் கொல்கத்தாவிலிருந்து பெங்களூர் செல்லும் விமானம் பிற்பகல் 1.45 க்குப் புறப்பட்டுச்செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications