விழுந்து கொண்டிருக்கிறது மிர் விண்கலம்
மாஸ்கோ:
மிர் விண்கலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு தீப்பிழம்பாகக் கடலில் விழுகிறது.
மிர் விண்கலம் இந்தியாவில் மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் விழும் ஆபத்தும் இருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வான்வெளியில் ஏவப்பட்டது மிர் விண்கலம். இது 140 டன் எடை கொண்டது.
மிர் விண்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விண்கலம் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.பல்வேறு கேளாறுகளால் மிர் நிலை தடுமாறி வந்தது. பொருளாதாரரீதியிலும் இதை வைத்திருக்க ரஷ்யா திணறி வந்தது. இதையடுத்து அதை அழித்துவிடரஷ்யா முடிவு செய்தது.
அதை பசிபிக் கடலில் மூழ்கடிக்கத் திட்டமிடப்பட்டது. 220 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள மிர் விண்கலத்தை பூமிக்குக் கொண்டு வரும் பணிவெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. மிர்விண்கலத்தை கடலில் விழ வைப்பதற்காக அத்துடன் ஒரு சரக்கு ராக்கெட்டும் இணைக்கப்பட்டுள்ளது.
எப்போது விழுகிறது மிர்விண்கலம்?
ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளபடி மிர்விண்கலத்தை விழ வைக்கும் முயற்சிகள் சரியாக நடைபெற்றால் இந்திய நேரப்படி சரியாக 11.50 மணி முதல் 12.00மணிக்குள் அது கடலில் விழுகிறது.
இப்போது அது பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது. 2,732 டிகிரி வெப்பத்துடன் படுவேகத்தில் அது வந்து விழும்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications