பிரசாரத்தில் எப்படி பேச வேண்டும் .. கண்ணப்பனின் dos and donts
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இன்னும் சில நாட்களில் தேர்வுசெய்யப்படுவர் என்று அக்கட்சியின் தலைவர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சிபேச்சாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றுவிவாதிப்பதற்காக கட்சித் தலைவர் கண்ணப்பன், முன்னாள் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர்எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், சென்னையில் கூட்டம் நடந்தது.
இதில் கண்ணப்பன் பேசியதாவது:
அநாகரிகமான வார்த்தைகளை பேச்சாளர்கள் உபயோகிக்கக் கூடாது. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளையும் அனுசரித்து, அணுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.
நமது கட்சி போட்டியிடும் தொகுதிகள் தவிர, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் தொகுதியிலும்வெற்றிவாய்ப்புக்கு பாடுபடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1200க்கும் மேற்பட்டோர் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 7தொகுதிகள் எவை என்பதை இன்னும் 2 நாளில் முதல்வர் கருணாநிதி தெரிவிக்கவுள்ளார். அதன் பிறகுவேட்பாளர் தேர்வு நடைபெறும்.
7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதோடு, அதிக வாக்குகளையும் பெற்று எங்களது பலத்தை நிரூபிப்போம் என்றார்கண்ணப்பன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications