வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தாதீர்
மதுரை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசுவாமி கூறியுள்ளார்.
சனிக்கிழமை நடந்த புதிய தமிழகத்தின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிவைேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துநிருபர்களுக்கு பேட்டியளித்த கிருஷ்ணசுவாமி கூறியாதாவது:
தமிழகத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.எனவே வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்கக் கூடாது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது.ஏனென்றால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தின் கிராமப் பகுதியில் இருக்கும் வயதானவர்களுக்கும், படிப்பறிவு இல்லாதவர்களுக்கும்மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாது.
கோடை காலம் உச்சத்தில் இருப்பதால் கிராமப் பகுதிகளிலாவது இரவு நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல்ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்நிறைவேற்றியுள்ளோம்.
இரண்டு நாட்களுக்குள் புதிய தமிழகம் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கருணாநிதிஅறிவிப்பார். அதன் பின்பு எங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications