மகனைக் கடத்தி விட்டனர் .. தாமரைக்கனி புகார்
சென்னை:
அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக எனது மகனை அதிமுகவினர் கடத்திச் சென்றுள்ளதாக அக்கட்சியிலிருந்துசமீபத்தில் நீக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. தாமரைக்கனி புகார் கூறியுள்ளார். ஆனால் அவரது மகன்இன்பத்தமிழன் இதை மறுத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட தாமரைக்கனிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவாய்ப்புத் தரவில்லை. மாறாக, அவரது மகன் இன்பத் தமிழனுக்கு வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார். ஆனால் இதைதாமரைக்கனி ஏற்கவில்லை.
சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக தாமரைக்கனி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் கட்சியை விட்டுநீக்கப்பட்டார். ஜெயலலிதா தன்னை நீக்கியதைக் கண்டித்து அவர் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப்போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், தனது மகன் இன்பத் தமிழனை அதிமுகவினர் கடத்திக் கொண்டு போய் விட்டனர் என்றுபோலீசில் புகார் கொடுத்துள்ளார் தாமரைக்கனி. சென்னை அரசினர் தோட்ட போலீசில் அவர் கொடுத்துள்ளபுகாரில் கூறியிருப்பதாவது:
எனது மகன் இன்பத் தமிழன் கடந்த ஒரு வாரகாலமாக சட்டமன்ற வளாகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட விடுதியில்தங்கியிருந்தார். 23-ம் தேதி மதுரையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு ஆம்னி பஸ்சில் போவதாகக் கூறிச்சென்றார்.
தான் வீட்டுக்குச் சென்றதும் போன் செய்வதாக எனக்குக் கூறிச் சென்றார். ஆனால் அப்படி போன் செய்யவில்லை.எனவே நான் மதுரையில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்குப் போன் செய்தேன். அவர்கள் எனது மகன்வரவில்லை என்றனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போன் செய்தேன். எனது வீட்டுக்கும் அவர் வரவில்லைஎன்றார்கள்.
நான் சமீபத்தில் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டுள்ளதால், எனக்கு அங்கு எதிரிகள் உருவாகியுள்ளனர். இதனால்அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது மகனை அதிமுகவினர் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்றுகூறியிருந்தார் தாமரைக்கனி.
அம்மாவின் தொண்டன் நான்:
இதற்கிடையே, தன்னை யாரும் கடத்தவில்லை என்று தாமரைக்கனி மகன் இன்பத்தமிழன் கூறியுள்ளார்.
தான் கடத்தப்பட்டதாக தந்தை தாமரைக்கனி புகார் கூறியததையடுத்து இன்பத்தமிழன் பெயரில் ஒரு அறிக்கைவெளியானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் அதிமுக நிர்வாகிகள் சிலருடன் நான் தங்கியுள்ளேன். என் பெயரில்,சனிக்கிழமை மாலை ஒரு அறிக்கை வந்தததைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். அந்த அறிக்கையை நான்வெளியிடவே இல்லை. அதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை.
நான் இதயதெய்வம், புரட்சித் தலைவியின் பூரண விசுவாசி, என் தந்தையின் செயல்பாட்டுக்கும், எனக்கும்தொடர்பில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிட நான் முறையாக மனு செய்துள்ளேன். இதய தெய்வம் அம்மாவின்போர்ப்படையில் நான் விசுவாசம் மிக்க ஒரு தொண்டன். இதுதொடர்பாக நான் அவருக்கும் கடிதம்எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார் இன்பத் தமிழன்.
தாமரைக்கனி சொல்வது உண்மையா, இன்பத் தமிழன் சொல்வது உண்மையா என்பது புரியவில்லை. போலீஸ்விசாரித்தால்தான் தெரிய வரும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications