தி.மு.கவுக்கு வாக்களிக்காதீர்கள்: வன்னியர் சங்கம்
சென்னை:
தி.மு.க கூட்டணியில் இருந்த வன்னியர் சங்கம் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.கவை எதிர்க்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில், வன்னிய அடிகளார் தலைமையிலான வன்னியர் சங்கம்அங்கம் வகித்து வந்தது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வன்னியர் சங்கம் வரவிருக்கும்தேர்தலில் தி.மு.கவை எதிர்ப்பது என முடிவு செய்துள்ளது.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியும் வன்னியர்சங்கத்தில் அங்கம் வகித்த வருகிறார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் த.ரா.கா. மூன்று தொகுதிகள்கேட்டது.ஆனால் தி.மு.க. 3 தொகுதிகள் கொடுக்க மறுத்து விட்டது.
வன்னியர்கள் அனைவரும் தே.ஜ.கூட்டணியை எதிர்க்க வேண்டும் என வன்னியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் தீரனும்வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்து வருகிறார்.
வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், தீரன் ஆகிய மூவரும் பங்கு கொண்ட வன்னியர் சங்க கூட்டத்திற்குபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் கூறியதாவது:
புதிய தமிழகமும், விடுதலை சிறுத்தை அமைப்பும் தென் தமிழ்நாட்டில் மத கலவரங்களுக்கு காரணமாகஇருந்தவர்கள். இவர்களுடன் தி.மு.க கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது. எனவே வன்னியர்கள் யாரும்தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றனர்.
வன்னியர்களும். தலித்களும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications