சொத்துத் தகராறு: ஈரோட்டில் பெண் தற்கொலை
ஈரோடு:
அண்ணனுக்கு சொத்தை விட்டுக் கொடுக்க தம்பி முடிவு செய்ததால், மனமுடைந்த தம்பியின் மனைவி தற்கொலைசெய்து கொண்டார்.
கோபிச்செட்டிபாளையத்தில் காண்டிராக்டராக இருந்து வருபவர் குணசேகரன் (37). இவரது மனைவிகிருஷ்ணவேணி (34). கிருஷ்ணவேணி தேசிய நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குபூர்வீக சொத்தாக ரூ. 50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.
இருவரும் சம்பாதிப்பதால் சொத்து முழுவதையும் தனது அண்ணனுக்கு விட்டுக் கொடுக்க குணசேகரன்விரும்பினார். ஆனால், இதற்கு கிருஷ்ணவேணி எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், குணசேகரன் குடித்து விட்டு வந்து இரவில் தகராறு செய்துள்ளார். தனது அண்ணனுக்குச் சொத்தைவிட்டுக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி தன் வீட்டில் உள்ளஒரு அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார். குணசேகரன், கிருஷ்ணவேணி கதவைச் சாத்தி விட்டு தூங்கிவிட்டதாகக் கருதி வேறு ஒரு அறைக்குச் சென்று தூங்கி விட்டார்.
மறுநாள் காலையில் நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், சந்தேகப்பட்ட குணசேகரன், கதவை உடைத்து திறந்துபார்த்தார். அப்போது அங்கு கிருஷ்ணவேணி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததைக் கண்டுஅதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications