For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயுத பேர ஊழலில் உண்மையைக் கண்டுபிடிப்பேன்: நீதிபதி வெங்கடசாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தெஹல்கா டாட் காம் இணையதளம் அம்பலப்படுத்திய ஆயுத பேர ஊழலில் உண்மையைக் கண்டுபிடிப்பேன் எனஇந்த விவகாரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கடசாமி கூறினார்.

இந்த ஊழலை விசாரிக்க நீதிபதி வெங்கட்சாமி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

இவருக்கும் தமிழகத்துக்கும் நிறையவே தொடர்புண்டு. வெங்கடசாமி 1959 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக தனது சட்ட வாழ்க்கையத் தொடங்கியவர். பின்னர் அட்வகேட் ஜெனரலானார்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 11 ஆண்டுகள்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

1994ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு ஒரு வருடம் பணியாற்றிய பிறகுசுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1999ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் இப்போதுசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரயில்வே கட்டண விவதார நடுவர் மன்றத்தலைவராக உள்ளார்.

ஆயுதப் பேர ஊழல் குறித்து முழு விசாரணை நடத்த தன்னை நியமனம் செய்தது குறித்து மிகவும்சந்தோஷப்படுவதாகவும், அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறிய வெங்கடசாமி சிறப்புப் அளித்த பேட்டி:

ஆயுதப் பேர ஊழல் வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தத்திட்டமிட்டுள்ளேன்.

தெஹல்கா டாட் காம் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திகளை இணையதளத்திலோ அல்லதுதொலைக்காட்சியிலோ எதிலும் பார்க்கவில்லை. இதுகுறித்து நான் விசாரணை செய்ய நியமிக்கப்படுவேன் என்றுசற்றும் எதிர்பார்க்கவில்லை.

முதலில் அந்த வீடியோ ஆதாரங்கள், தெஹல்கா வெளியிட்டுள்ள செய்திகள் ஆகியவை குறித்து நான் பார்க்கவேண்டும்.

ஆயுதப் பேர ஊழல் வழக்கை விசாரிப்பதற்கான நியமன உத்தரவுக் கடிதம் கூட இன்னும் என கையில்கிடைக்கவில்லை.

வரும் வெள்ளிக்கிழமை டெல்லி சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். அதற்குப்பிறகுதான் விசாரணையைத் தொடங்க முடியும்.

எந்த முறையில் விசாரணையை மேற்கொள்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் தொழில்நுட்பஉதவியாளர்கள், குரலை அடையாளம் கண்டுபிடிக்கும் நிபுணர்கள் ஆகியோரை நியமிக்கவுள்ளேன். தெகல்காவெளியிட்டுள்ள வீடியோவின் உண்மை நிலையைக் கண்டுபிடிக்க பிலிம் லேப்களின் உதவியையும் கோருவேன்.

ஆயுதப் பேர ஊழலில் யார், யாரை விசாரணை நடத்த வேண்டும், எந்த முறையில் விசாரணை நடத்த வேண்டும்என்பது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்வேன்.

படிப்படியாக, இந்த வழக்கில் விசாரணை நடத்தவுள்ளேன். இதற்கான முழு ஆவணங்களையும் திரட்டவுள்ளேன்.

நான் விசாரணை நடத்தி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்பேன். அந்த அறிக்கையை பகிரங்கப்படுவதாஇல்லை ரகசியமாக வைப்பதா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்.

இந்த வழக்கு விசாரணையில் தெஹல்கா டாட் காம் இணைய தள நிருபர்களைத்தான் முதலில் விசாரிப்பேன். இந்தச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் மற்றும் டிவிக்களும் என் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்என நம்புகிறேன்.

எனது வேலை ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிப்பதுதான். விசாரணைஅறிக்கையின் படி, தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் அவர்கள் மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு கவனித்துக் கொள்ளும்.

எனது மகள்களைப் பார்ப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தோம். பயணம் சுகமாகஅமைய வேண்டிக் கொள்வதற்காக திருப்பதிக்குச் சென்றோம். அமெரிக்காவிலிருந்து பத்திரமாகத்திரும்பிதையடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்த மீண்டும் திருப்பதிக்குச் சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தோம் என்றார்.

நீதிபதி வெங்கடசாமிக்கு மூன்று மகள்கள். ஒருவர் இன்ஜினியரைத் திருமணம் செய்து கொண்டு சிகாகோவில்வசிக்கிறார். இன்னொருவர், உதாக் பல்கலைக்கழக பேராசிரியரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில்சால்ட் லேக் சிட்டியில் வசிக்கிறார். மூன்றாவது மகள், மனநல மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டுகனடாவில் ஒட்டாவோவில் வசிக்கிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X