ஆயுதப் பேர ஊழல்: பா.ஜ.க மாபெரும் பேரணி
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் புகாருக்கு எதிராக டெல்லியில் பாஜக ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடத்தியது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணிநடந்தது.
இந்தப் பேரணியில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் பாதல், முன்னாள்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியை அடுத்து நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேல் வேண்டுமென்றேபல குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறது.
தெஹல்கா டாட் காம் அம்பலப்படுத்திய ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து எந்த விசாரணைக்குத் தயார் என்றும்பேரணியில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.
காங்.பேரணி:
இதற்கிடையே, ஆயுதப் பேர ஊழல் வழக்கிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்என்று காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
பேரணியை அடுத்து நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, கமல்நாத்,ஆஸ்கர் பெர்னான்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் 10 ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் வாஜ்பாய் அரசைக் கண்டித்து பேரணி நடத்துவதுஎனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications