ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்: கவுண்ட்டெளன் தொடங்கியது
சென்னை:
நாளை மறுதினம் விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுக்கான கவுண்ட்டெளன் திங்கள்கிழமைகாலை 5.30 மணிக்குத் தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளித் தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. 28ம் தேதி பிற்பகல்3.47 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. ஏவப்படும் என விண்வெளித்துறையின் தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் கூறினார்.
2000 கிலோ எடை கொண்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் ஏவும் திறன்கொண்டது இந்த ராக்கெட்.
49 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 410 டன் எடை கொண்டது. ராக்கெட் முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட என்ஜின்கள் பயன்படுத்தப்படும். இவை திட, திரவ எரிபொருள்கள் பயன்படுத்தி பறக்கும்.
இறுதிக் கட்டத்தில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்படும். ஜி.எஸ்.எல்.வி. ஏவப்படுவதை இந்தியதொலைக்காட்சியான தூர்தர்ஷன் ஒளிபரப்பும். 28ம் தேதி 3.15 மணி முதல் இந்த ஒளிபரப்பு தொடங்கும்.












Click it and Unblock the Notifications