For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவை சுருட்டியது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

Rahul Dravid5 தொடர்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில்ஆஸ்திரேலியாவை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்டில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில்ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்துடன் களமிறங்கியது இந்தியா.

டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. முதலில் துவக்கஆட்டக்கார்ககளாக இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலியும், சச்சின் டென்டுல்கரும்களமிறங்கினார். ஆனால் சவுரவ் கங்குலி முதலில் ஆட்டமிழந்தார்.

நடந்து முடிந்த 3 டெஸ்ட் பந்தயங்களிலும் கங்குலி சிறப்பாக விளாைடவில்லை.கங்குலி ஆட்டமிழந்தவுடன் அவருடன் ஜோடி சேர்ந்தார் வி.வி.எஸ். லட்சுமண். அவர்டெஸ்ட் பந்தயங்களில் சிறப்பாக விளையாடி இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லமுக்கிய காரணமாக இருந்தார். இதனால் இவர் களமிறங்கியதும் ரசிகர்கள் ஆரவாரகரகோஷம் செய்து அவரை வரவேற்றனர்.

சச்சின் டென்டுல்கர் மெக்ராத்தின் ஒரே ஓவரில் 1 சிக்சரும், நான்கு 4 ரன்களும் அடித்துமெக்ராத்தை கதி கலங்க அடித்தார். லட்சுமணும் சிறப்பாக ஆடினார். ஆனால் ஒருரன்னுக்கு மட்டுமே வாய்ப்பிருந்த போது இரண்டாவது ரன் எடுக்க சச்சின் முனைந்தார்.ரன் எடுக்க வாய்ப்பில்லை என உணர்ந்த லட்சுமண் சச்சினை திருப்பி அனுப்பினார்.ஆனால் காலம் கடந்து சச்சின் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

லட்சுமண் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சச்சின் ஆட்டமிழந்த பின் லட்சுமணுடன்ஜோடி சேர்ந்தார் பெங்களூர் ஹீரோ ராகுல் டிராவிட். இந்த போட்டி பெங்களூரில்நடந்ததால் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவரும்ரசிகர்களை ஏமாற்றவில்லை.

டிராவிடும், சிவாக்கும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். சிவாக் 54 பந்துகளில் 58ரன்கள் எடுத்தார். விஜய் தாஹியா சிறப்பாக ஆடி 39 பந்துகளில் 51ரன்கள் குவித்தார்.ராகுல் டிராவிட் 84 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

Veerendra Sehwag49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்கள் எடுத்தது.இந்தியா.

316 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா 255ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் தரப்பில் ஹைடன் 99 ரன்கள் எடுத்துஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் வா. சிவாக் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூஆனார். ஆனால் அவர் அவுட் ஆகவில்லை என வர்ணனையாளர்கள் கூறினர். ஸ்டீவ்வா ஆடிய விதம் மீண்டும் மீண்டும் டிவியில் ரீப்ளே மூலம் காட்டப்பட்டது.

ஸ்டீவ் வா அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்புகள்பிரகாசமாக இருந்திருக்கும்.

இந்திய தரப்பில் ஸ்ரீ நாத் 7.3 ஓவர்களில் 49 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளைகை பற்றினார். ஜாஹீர்கான் 8 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைபற்றினார். அஜித் அகார்கர் 8 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.சிவாக் 9 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைபற்றினார்.

நடந்து முடிந்த டெஸ்ட் பந்தயங்களில் ஹாட்ரிக் சாதனை புரிந்து அதிகவிக்கெட்டுகளை கை பற்றிய ஹப்பஜன் சிங் இந்த போட்டியில் ஒரு விக்கெட்டும் கைபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக சிவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்

போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கன்னடர்களின் புத்தாண்டு தினமானயுகாதி நாளாகும். இந்தியாவின் வெற்றி பெங்களூர் மக்களுக்கு யுகாதி பரிசாகஅமைநந்தது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்றபுள்ளிகள் பெற்று முன்னணியில் உள்ளது.அடுத்த ஒரு நாள் போட்டி இந்த மாதம் 28-ம்தேதி புனாவில் நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X