For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் மயமாகிப்போன ஜனநாயகம்: மேதா பட்கர் கவலை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ஊழல் என்பதே ஜனநாயகத்தின் நிலையாக மாறி விட்டது என சமூக சேவகி மேதா பட்கர் கூறினார்.

கோவையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த மேதா பட்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

ஊழலில் பணம் மட்டும் சுரண்டப்படவில்லை. இயற்கை வளங்களும் கூட சுரண்டப்படுகிறது. ஒவ்வொருதுறையிலும் ஊழல் புகுந்துள்ளது. கொள்கைகள், கோட்பாடுகள், தன்னமலற்ற சேவை என்பதெல்லாம் அரசியல்கட்சிகளிடம் துளி அளவு கூட இல்லை.

அவற்றையெல்லாம் வெளியேற்றி விட்டு சுய லாபத்துக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.பிரதான கட்சிகள் தங்கள் கொள்கைகளை கைவிட்டு விட்டன. ஆட்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத்துணிந்து விட்டன.

உலகமயமாக்கலால், இந்தியாவில் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். பொதுத் துறைநிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர்கள் வேலைஇழந்து தவிக்கின்றனர். தெஹெல்கா. காம், ஊழலின் ஒரு பகுதியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நாடு முழுவதும் அரசியல் விழிப்புணர்வு, உலகமாயமாக்கல் எதிர்ப்பு, தனியார் மய எதிர்ப்பு ஆகியவற்றைவலியுறுத்தி மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் ஏப்ரல் தல் 400க்கும்மேற்பட்ட வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்ய அரசு அனுமதியளிக்கவுள்ளது. இதனால், பெரும் பாதிப்புஏற்படும்.

கோவை அருகே உள்ள தூவைபதி கிராமத்தில் வன உயிரினப் பூங்கா அமைக்க அரசு நிலம்கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஆதிவாசி கிராம மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நிலங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன என்றார் மேதா பட்கர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X