For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜி.எஸ்.எல்.வி. என்றொரு கனவு

By Staff
Google Oneindia Tamil News

GSLVஇந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் சாதனை ஆர்யபட்டா செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியதுடன் தொடங்கியது.அடுத்தடுத்த பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தினோம். இந்திய விமானப் படை விமானியான ராகேஷ் சர்மாவைரஷ்யாவின் ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பினோம்.

அடுத்து 1980ம் ஆண்டில் எஸ்.எல்.வி. (சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்) ராக்கெட் தயாரித்தோம், அதைக் கொண்டு 40 கிலோஎடையுள்ள ஐ.ஆர்.எஸ். ரகத்தைச் சேர்ந்த ரோகினி செயற்கைக் கோளை ஏவினோம். இந்த ராக்கெட்டால் இவ்வளவு எடைகுறைவான செயற்கைக் கோளை சுமார் 600 கி.மீ. உயரத்தில் தான் செலுத்த முடிந்தது.

இந்த ராக்கெட் 4 ஸ்டேஜ்களைக் கொண்டது. ஒவ்வொரு ஸ்டேஜூம் திட எரிபொருளை பயன்படுத்தி பறக்கும் திறன் கொண்டது.திட எரிபொருள் என்பதால் பல பிரச்சனைகள் வந்தன. எரிபொருளின் எடையே மிக அதிகமாக இருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு பறக்கவே ராக்கெட்டு நிறைய சக்தி தேவைப்பட்டது.

ASLVஇதையடுத்து அதைக் கொஞ்சம் மேம்படுத்தி 5 ஸ்டேஜ் கொண்ட ஏ.எஸ்.எல்.வி. (ஆக்மென்டட் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்)ராக்கெட் தயாரித்தது இந்தியா. இது வானை விட கடலையே அதிகம் நேசித்தது. 1987, 1988ம் ஆண்டுகளில் ஏவப்பட்ட இந்தராக்கெட்கள் கடலில் விழுந்து சங்கமமாயின.

கடைசியாக 1992ம் ஆண்டில் வானில் வெற்றிகரமாகப் பாய்ந்தது ஏ.எஸ்.எல்.வி. ஆனால், பூமியிலிருந்து 400 கி.மீ. வட்டப்பாதையில் செயற்கைக் கோளை செலுத்துவதற்கு பதிலாக குறைவான உயரத்தில் செயற்கைக் கோளை விட்டுவிட்டு கீழேவிழுந்தது ராக்கெட்.

விடவில்லை இஸ்ரோ. 1994ம் ஆண்டில் செலுத்தப்பட்ட 4-வது ஏ.எஸ்.எல்.வி. ராக்கெட் கச்சிதமாக செயல்பட்டது. செயற்கைக்கோளை பூமியிலிருந்து 450 கி.மீ.-950 கி.மீ. நீள்வட்டப் பாதையில் செலுத்தியது.

PSLVஅடுத்து நாம் தயாரித்தது பி.எஸ்.எல்.வி. (போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்) ராக்கெட். இது ஏ.எஸ்.எல்.வியை விட அதிகதிறன் கொண்டது. இதன் முதல் இரண்டு ஸ்டேஜ்கள் திட எரிபொருளையும், 3வது மற்றும் 4-வது ஸ்டேஜ்கள் திரவஎரிபொருளையும் கொண்டு இயங்குபவை. இந்த ராக்கெட் 1993ம் ஆண்டு சோதனையிட்டுப் பார்க்கப்பட்டது. ராக்கெட்நன்றாகவே பறந்தது. ஆனால், திட்டமிட்ட உயரத்தை அடையவில்லை. இதையடுத்து 1994ம் ஆண்டு இரண்டாவதுபி.எஸ்.எல்.வி. ஏவப்பட்டது. இது சரியான உயரத்தில் ஐ.ஆர்.எஸ். செயற்கைக் கோளை ஏவியது. இதன் பின்னர் அடுத்தடுத்துஇரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை வெற்றிகரமாக ஏவியது இந்தியா.

இத்தனை ராக்கெட்களை ஏவியிருந்தாலும் இந்தியாவின் கனவு ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. தான். நாம் டி.வி. பார்க்க, ஐ.எஸ்.டி.தெலைைபேசி செய்ய உதவுவது சாட்டிலைட்கள் தான். இன்டர்நெட்டை உலகம் முழுவதும் பின்னி வைத்திருப்பதும் சாட்டிலைட்தான். விமானங்களுக்கு வழி காட்டுவதிலிருந்து, கப்பல்களுக்கு கரை காட்டுவது வரை, மேகம் கருக்குமா, மழை பெய்யுமா,கடலில் இந்த இடத்தில் மீன் கிடைக்குமா என்பது வரை சாட்டிலைட்களின் பயன்பாடு பரவிக் கிடக்கிறது.

இதற்காக நாம் தயாரித்து வானில் வைத்திருக்கும் செயற்கைக் கோள்கள் தான் இன்சாட் ரக சாட்டிலைட்டுகள். ஒரு செயற்கைக்கோளை நமது நாட்டுக்கு நேராக 24 மணி நேரமும் நிறுத்தி வைக்க வேண்டுமானால் அதை பூமியிலிருந்து 36,000 கி.மீ.உயரத்தில் செலுத்தியாக வேண்டும். இந்த இடத்துக்கு ஜியோ சின்க்ரோனஸ் ஆர்பிட் என்று பெயர்.

இந்த உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை விட்டுவிட்டால் போதும், அது பூமியின் சுழற்சிக்கு இணையான வேகத்தில் தானும்பறக்க ஆரம்பிக்கும். இதனால் இந்தியாவிக்கு நேராக இந்த உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை ஏவிவிட்டால் அது அந்தஇடத்திலேயே நிலை நிறுத்தப்பட்டது போலத் தோன்றும்.

ஆனால், ஒரு செயற்கைக் கோளை 36,000 கி.மீ. உயரத்தில் செலுத்த மிக சக்தி மிகுந்த ராக்கெட்கள் வேண்டும். இத்தனைத் திறன்மிக்க ராக்கெட் நம்மிடம் இல்லாததால் இதுவரை ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ராக்கெட்கள் மூலம் நமது இன்சாட் வகையைச் சேர்ந்ததொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை செலுத்தி வந்தோம். இதற்கு பெரும் செலவாகிறது.

இதையடுத்து திறன் மிக்க ராக்கெட்களை நாமே தயாரிப்பது என இந்தியா முடிவெடுத்தது. 1980ம் ஆண்டில் இதற்கான பணிதுவங்கியது. ஜி.எல்.எல்.வி. எனப் பெயரிடப்பட்ட இந்த ராக்கெட்டைத் தயாரிக்கும் பணியில் இந்தியா கிட்டத்தட்ட 20ஆண்டுகளை செலவிட்டுள்ளது.

GSLVஇந்த ராக்கெட்டுக்குத் தேவைப்படும் கிரையோஜெனிக் என்ஜின்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது.ஆனால், இந்த என்ஜினை இந்தியாவுக்குத் தரக் கூடாது என ரஷ்யாவை அமெரிக்கா நெருக்கியது. சோவியத் யூனியன் உடைந்தநிலையில் அமெரிக்காவின் நிதி உதவியை எதிர்பார்த்திருந்த ரஷ்யா கடைசி நேரத்தில் காலை வாரிவிட இந்தியாவின்ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கனவும் நீண்டு கொண்டே போனது.

ஆனால், ஒரு வழியாக கடந்த ஆண்டு இரு கிரையோஜெனிக் என்ஜின்களை ரஷ்யா, இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அந்தநாளில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிப்புப் பணியும் சூடு பிடித்தது. இந்த என்ஜின்கள் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவஹைட்ரனை எரிபொருளாகக் கொண்டு இயங்குபவை.

ஜி.எஸ்.எல்.வி. மூன்று ஸ்டேஜ்களைக் கொண்டது. முதல் ஸ்டேஜ் மோட்டார் திட எரி பொருளைக் கொண்டு இயங்கும். இதைச்சுற்றி 4 சிறிய ராக்கெட்கள் இணைக்கப்பட்டிருக்கும். இவை திரவ எரிபொருளால் இயங்கும். முதல் ஸ்டேஜில் இருக்கும் 129 டன்திட எரிபொருள் ராக்கெட் ஏவப்பட்ட 2 நிமிடத்தில் முழுவதும் எரிந்துபோய்விடும்.

இரண்டாவது ஸ்டேஜ் மோட்டார் திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கும்.

மூன்றாவது மோட்டார் கிரையோனிஜ் என்ஜினைக் கொண்டது. இந்த என்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணியும் ஒருபக்கம் நடந்து வருகிறது.

இப்போது இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைத் தயாரித்து முடித்திருப்பதன் மூலம் உலகில் இந்த வரை ராக்கெட் வைத்திருக்கும்5வத நாடாக இந்தியா திகழ்கிறது. இத்தனைத் திறன் கொண்ட ராக்கெட்கள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியநாடுகளிடம் மட்டும் தான் இப்போது உள்ளன.

இன்று பறக்கவுள்ள ஜி.எஸ்.எல்.வி. டெல்டா-2 என்ற இந்த ராக்கெட் 2,500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை 36,000 கி.மீ.உயரத்தில் செலுத்தும் .

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X