14 ல் 4 மனைவிகளைக் கொன்றவர் கைது
புவனேஸ்வர்:
ஒரிசாவில் பாலாசோர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவர் தனது 14 மனைவிகளில் 4 பேரைக் கொலை செய்ததுதொடர்பாக போலீசாரால் கைது செய்ப்பட்டார்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி சர்மா கூறியதாவது:
ஒரிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ளது பாலவாமகாடி டவுன். இது தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 214கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் பாகீரதி கிரி. வயது 35. இவர் கடந்த 17ஆண்டுகளில் 14 பேரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் திருமணம் செய்து கொண்ட பெண்களில் பெரும்பாலானோர் சிறுமிகள். பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட இவர், மனைவிகளைக் கொலை செய்ய ஆரம்பித்தார். 1995 ம் ஆண்டு தனது மனைவிகளில் ஒருவரைக்கொலை செய்த பின் தலைமறைவாகி விட்டார்.
கிரி அடிக்கடி தனது பெயரை மாற்றிக் கொண்டு, பாலாசோர் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்குச் சென்று பலசிறுமிகளைத் திருமணம் செய்து கொள்வார். திருமணம் செய்து கொண்டபின் அவர்களை வலுக் கட்டாயமாக புதியஆடைகளை அணியச் சொல்லி விட்டு அவர்களைக் கொலை செய்து விடுவார்.
1995 ம் ஆண்டு ஆஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதுகண்டு பிடிக்கப்பட்டது. அது இயற்கையான மரணமாக இருக்கும் என்று முதலில் வழக்கை முடித்து விட்டோம்.ஆனால் அவரைத் திருமணம் செய்து கொண்ட கிரி காணாமல் போய் விட்டதால் இந்தக் கொலையில் இவருக்குச்சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து பல இடங்களில் தேடி கிரியை மன்தாதா கிராமத்திலிருந்து கொண்டு வந்தோம். அவரை விசாரித்ததில்பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. அதாவது அவர் இதுவரை 14 பேரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் சுகந்தி கிரி (16), ஆர்த்தி கிரி (22), கவுரி கிரி (15), கீதாராணி கிரி (25) ஆகியோரைக்கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.
கிரி திருமணம் செய்து கொண்ட மீதி 10 மனைவிகள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களையும் கிரிகொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை தனது நான்கு மனைவிகளை மட்டும் கொலைசெய்ததாக கிரி கூறியுள்ளார்.
அவர் மனநோயாளியாக இருப்பாரோ என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரை நல்ல மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்யவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.
கடந்த வருடம் இதே போல் கஜபதி மாவட்டத்தில், 12 க்கும் மேற்பட்டடோரை தூங்கிக் கொண்டிருக்கும் போதுஅவர்கள் மேல் கற்களை வீசிக் கொன்றது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications